விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
துபாய் airshow-ல் இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் சர்வதேச விமானப்படை விமான கண்காட்சி கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசி நாளான இன்று பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் கலந்து கொண்டன. இந்த கண்காட்சியில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் பங்கேற்றது. சாகசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது விமானம் திடீரென கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. விமானம் விபத்துக்குள்ளானது அங்கிருந்த மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்தநிலையில் விமான விபத்தில் விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. இதுதொடர்பான பதிவில், ‘துபாய் விமான கண்காட்சியில் இன்று நடைபெற்ற சாகசத்தின் போது IAF தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிக்கு உயிரிழந்துள்ளார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான சமயத்தில் அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு இந்திய விமானப்படை துணையாக நிற்கும். விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதல்முறை. கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் ராஜஸ்தானின் ஜெய்சால்மரின் இந்த விமானம் முதல்முறையான விபத்துக்குள்ளாது. ஆனால் அப்போது விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். விபத்து நடந்து 2 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் துபாய் கண்காட்சியில் விபத்து ஏற்பட்டு விமானி உயிரிழந்துள்ளார்.