Supreme Court bail to BRS Kavitha : ”அந்த ஒரு நாள்...”காத்திருந்த கவிதா நீதிமன்றம் தந்த SURPRISE!

Continues below advertisement

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகள் கவிதாவிற்கு கடந்த 5 மாதங்களாக சிறையில் உள்ளார். இந்தநிலையில் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு அமல்படுத்திய மதுபான கொள்கை அவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய இந்த மதுபான கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது.

இதையடுத்து, மணிஷ் சிசோடியா, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறி தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்டார்.அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்த அவரது ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது ஜாமின் மனு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

அவரது மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய்ச, சுவாமி நாதன் ஜாமின் வழங்கினர். மேலும், இந்த வழக்கை சி.பி.ஐ. நேர்மையாக விசாரிக்கிறதா? கவிதா படித்தவர் என்பதற்காக உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பதா? என்றும் கேள்வி எழுப்பினார்கள். மேலும், கவிதாவுக்கு ஜாமின் வழங்க அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சேபனை தெரிவித்தபோதும் நீதிபதிகள் அதை நிராகரித்தனர். கவிதாவுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதிகள் அரசுத் தரப்பு சாட்சியாக மாறியவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து கவிதா மீது வழக்குப்பதிவுவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நீண்ட மாதங்களாக சிறையில் இருந்து வந்த கவிதா தற்போது விடுதலை ஆகியிருப்பது பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நீண்ட மாதங்களாக சிறையில் இருந்த மணீஷ் சிசோடியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியில் வந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவைத் தேர்தலின்போது ஜாமினில் வெளியில் வந்து தேர்தல் பிரச்சாரம் ஆகியவற்றை முடித்துவிட்டு தற்போது மீண்டும் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram