Ratan Tata Untold love story | ரத்தன் டாட்டா BREAK UP 💔 கடைசி வரை BACHELOR!
தன்னுடைய நிறைவேறாத காதலுக்காக வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்து கொள்ளாமல் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலராக வாழ்ந்து மறைந்துள்ளார் ரத்தம் டாட்டா..
ரத்தம் தாத்தா வாழ்வில் இரண்டு பெண்கள் மிக முக்கியமானவர்கள். முதல் பெண் அவருடைய பாட்டி ஜம்சத் பாய் டாட்டா. சிறுவயதில் பெற்றோர்கள் பிரிந்ததால் பாசத்திற்காக ஏங்கிய ரத்தம் டாடாவிற்கு அனைத்துமாக இருந்து அவரை வழி நடத்தியவர். ரத்தம் தாத்தாவின் தாய் சோனு டாட்டா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட போது, பள்ளியில் நண்பர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர். பலமுறை அதீத கோபத்தால் ரத்தம் தாத்தாவிற்கு சண்டை போடத் தோன்றும், ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்குமாறு பாட்டி சொன்னதை ஏற்றுக்கொண்ட ரத்தம் டாடா. இது அவருடைய வாழ்நாள் முழுவதுமே பிரதிபலித்தது.
இந்நிலையில் அந்த இரண்டாவது பெண் குறித்த தகவலை ஒருமுறை ஹியூமன் சாப் பாம்பே பேசுகையில் பகிர்ந்துள்ளார் ரத்தம் டாட்டா. அதில் "லாஸ் ஏஞ்சல் செல் இருக்கும்போது ஒரு பெண்ணை நான் சந்தித்தேன். காதலில் விழுந்தேன், இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். ஆனால் அந்த தருணத்தில் என்னுடைய பாட்டியை ஏழு வருடமாக பிரிந்து தான் அமெரிக்காவில் இருந்தேன், அவருடைய உடல் நிலையும் நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக எனக்கு தெரிய வந்தது. அதனால் தற்காலிகமாக இந்தியா சென்று விட்டு அமெரிக்கா திருப்பலாம் என்று நினைத்தேன். பாட்டியைக் காண இந்தியா போகும்போது நான் காதலித்த பெண்ணும் என்னுடன் வருவாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 1962 காலகட்டத்தில் இந்தியா சீனா இடையே பதற்றமான போர் சூழல் நிலவி வந்ததால். என்னுடன் வர அவள் மறுத்துவிட்டால். அதனால் எங்கள் காதல் அங்கேயே முறிந்தது.
அதன்பின் என் செல்ல பிராணிகளான நாய்களுடன் நேரத்தை செலவிடுவேன், கார்களை ஓட்டுவேன், பாட்டியை பார்த்துக் கொள்வேன் இப்படியே வாழ்க்கை ஓடியது. அதன் பின் டாட்டாவின் பொறுப்புகள் நான் ஏற்றுக்கொண்ட பிறகு, மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்பதிலேயே என் கவனம் சென்றது. என்னுடைய வேலை தான் என்னுடைய லைஃப் ஸ்டைல். மும்பையில் என் வீட்டில் இருப்பேன், அல்லது எங்காவது பயணம் செய்து கொண்டிருப்பேன். இரண்டு மூன்று முறை எனக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது, சில பெண்களை சந்தித்தேன். ஆனால் அவர்களை என்னுடைய வாழ்க்கையில் நுழைத்து, அவர்களை அட்ஜஸ்ட் செய்ய நிர்பந்திப்பது சரியாக இருக்காது என்று விரும்பினேன். அதனால் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்க்கையை கழித்து விட்டேன்" என்று ரத்தம் டாடா தெரிவித்தார். இந்நிலையில் அவருடைய மறைவை கோடிக்கணக்கான மக்கள் சோகத்துடன் அனுசரித்து வரும் இந்த நேரத்தில், ஏன் ரத்தம் டாட்டா இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற தகவல்களை பலர் ஆர்வத்துடன் தேடி தேடி வருகின்றனர்.