Ratan Tata Passed away | RIP ரத்தன் டாடாஉடலுக்கு இறுதி அஞ்சலி! கண்ணீர் மழையில் மக்கள்

Continues below advertisement

வயது மூப்பின் காரணமாக பிரபல தொழிலதிபரும் டாட்டா குழுமனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா நேற்றிரவு மும்பையில் காலமான நிலையில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக எங்கு வைக்கப்படுகிறது அவரது இறுதி ஊர்வலம் எப்போது நடைப்பெற போகிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 

உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா நேற்றிரவு 11 மணி அளவில் உயிரிழுந்தார். டாடவின் மறைவுக்கு  பிரதமர் மோடி முதல் உலகம் முழுவதிலிருந்தும் பல்வேறு, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள்  ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கோடிக்கணக்கான இந்தியர்களின் வீட்டில் எதாவது ஒரு வகையில் டாடா நிறுவன பொருள்களை  பயன்படுத்தியிருப்போம். அப்படி எல்லோரின் வீட்டிலும் இடம்ப்பெற்றிருக்கும் ரத்தன் டாடாவின் உடலுக்கு பொதுமக்கள்நிச்சயம் அஞ்சலி செலுத்த வருவார்கள். 

பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில்  மும்பையில் உள்ள தேசிய கலை மையத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொது மக்களின் அஞ்சலிக்காக ரத்தன் டாடாவின் உடல் வைக்க்ப்படவுள்ளது. இதற்கான ஏற்ப்பாடுகளை மகாராஷ்ட்டுரா அரசு செய்துள்ளது.
ரத்தன் டாடாவின் சமூக அர்ப்பணிப்பு மற்றும் தைரியமான அனுகுமுறைக்காக அவரின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மேலும் அஞ்சலிக்காக வரும் பொதுமக்கள் தேசிய கலை மையத்தில் மூன்றாவது வாயில் வழியாக உள்ளே வந்து 2 வது வாயில் வழியாக செல்ல ஏற்ப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால் அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்பிறகு மாலை 4 மணியளவில் ரத்தன் டாடாவின் உடல் வோர்லியில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அவரது இறுதிச்சடங்கில் மத்திய அரசின் சார்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ள உள்ளார். மேலும் ரத்தன் டாடாவின் மறைவையோட்டி மகாராஷ்ட்டிராவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும்  இன்று நடைப்பெறுவதாக இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிக்ளும் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் ஏத்நாத் ஷிண்டெ அறிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram