Parliament Rain : நாடாளுமன்றத்திற்குள் மழை!பக்கெட்டில் பிடிக்கும் அவலம்!சுத்துப் போட்ட எதிர்க்கட்சிகள்

Continues below advertisement

971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்திற்குள் கசியும் மழைநீரை பக்கெட் வைத்து பிடிக்கும் வீடியோ வெளியாகி எதிர்க்கட்சியினரின் விமர்சன வலையில் சிக்கியுள்ளது. 

டெல்லியில் நேற்று மாலை கனமழை விடாமல் கொட்டித் தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் புதிய நாடாளுமன்ற வளாகமும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு செல்லும் சாலைகளும் நாடாளுமன்ற வளாகத்தின் உள்பகுதியிலும் மழை வெள்ளம் சூழ்ந்திருந்திருந்தது.

அதுவும் நாடாளுமன்றத்தின் மையப்பகுதியில் கசியும் மழைநீரை ஊழியர்கள் பக்கெட் வைத்து பிடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது. செங்கோல் விவகாரம், குடியரசுத் தலைவரை திறப்பு விழாவுக்கு அழைக்காதது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட நாடாளுமன்றத்துக்கு மழைநீர் கசிவதாக எதிர்க்கட்சிகள் பாஜகவை ரவுண்டுகட்டி வருகின்றனர். அனைத்து கட்சி எம்.பிக்களும் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டு நாடாளுமன்ற கட்டடத்தை ஆய்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை வைத்துள்ளார். 

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ”புதிய நாடாளுமன்றத்தை விட பழைய நாடாளுமன்றம் சிறப்பாக இருந்தது. பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் மழைநீர் கசிவதை சரிசெய்யும் வரையிலாவது பழைய நாடாளுமன்றத்திற்கு செல்லலாம். பாஜக ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களிலும் நீர் கசிவது, அவர்களது கட்டமைப்பின் ஒரு பகுதியா என மக்கள் கேட்கிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram