Rahul Gandhi Vs Amit Shah : தலையில் கைவைத்த மோடி! அனல் பறந்த ராகுல் பேச்சு! ஆவேசமான அமித்ஷா
இந்துக்கள் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள், வெறும் வெறுப்பு, வன்முறை, பொய் ஆகியவற்றை மட்டுமே பேசுவதாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ராகுலின் பேச்சை இடைமறித்த பிரதமர் மோடி “இந்துக்களை வன்முறையாளர்கள் என்று சித்தரிப்பதா என்று கேள்வி எழுப்பியதால் மக்களவையில் புகம்பம் வெடித்தது. பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் அமளியில் ஈடுபட, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமித்ஷா அறிவுறுத்தியதால்.. இன்றைய மக்களவை அதிர்ந்தது..
எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்தி, மக்களவையில் இன்று ஒட்டுமொத்த பாஜகவினரையும் தன்னுடைய பேச்சால் அடித்து பந்தாடியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் ராகுல் காந்தி பேசிக்கொண்டிருக்கும் போதே, அதை மறித்து தங்களுடைய கருத்தை பதிவு செய்ததால், I.N.D.I.A மற்றும் NDA கூட்டணி இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்தது. இதனால் நாடாளுமன்றமே அதிர்ந்தது.
குறிப்பாக ராகுல் காந்தி பேசுகையில் “ஹிந்துசம், இஸ்லாம், சீக்கிஸம், புத்திசம் ஆகிய அனைத்து மதங்களுமே அகிம்சையையும், பயத்தையுமே ஒழிக்கின்றன. ஆனால் இந்துக்கள் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள், வெறும் வெறுப்பு, வன்முறை, பொய் ஆகியவற்றையே பேசுகின்றனர். நீங்களேல்லாம் ஹிந்துக்களே கிடையாது” என்று கர்ஜித்தார்..
மேலும் திரைப்படத்தின் மூலமாகவே இறந்து போன காந்தியின் பெருமை மீட்டெடுக்க பட்டதாக பேசியுள்ளீர்கள், இதில் உங்களின் அறியாமையை புரிந்துகொள்ள முடிகிறதா?
இதனால் நாடாளுமன்றத்தில் I.N.D.I.A மற்றும் NDA கூட்டணிமாறி மாறி வாக்குவாதம் செய்துகொண்டனர்.
உடனே தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்த மோடி “ஒட்டுமொத்த இந்துக்களை வன்முறையாளர்கள் என்று சொல்வது மிகவும் தீவிரமானது” என்றார்.
அதை தொடர்ந்து எழுந்த மத்திய அமைச்சர் அமித்ஷா “வன்முறையை எந்த மதத்தோடு கலந்து பேசினாலும் அது தவறு, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இப்படி மாறி மாறி இருக்கட்சியினரும் காரசாரமான விவாதம் செய்துக்கொண்டதால், நாடாளுமன்றத்தில் டெசிபல் எகிறியது.