Rahul gandhi Shivan Photo : ராகுல் கையில் சிவன்! அப்செட்டான மோடி“ இந்துத்துவா உங்க சொத்தா?”
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிவபெருமான் படத்தை காட்டி பிரதமர் மோடியை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசியதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடும் கண்டனம் தெரிவித்தார்.
மக்களவையில் பேசிய எம்.பி ராகுல்காந்தி பிரதமர் மோடியையும் பாஜகவினரையும் ரவுண்டு கட்டினார். அரசியலமைப்பு மீதான தாக்குதலை எதிர்த்தவர்கள் மீது திட்டமிட்டு சதி நடந்தது. எங்களில் பலர் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டனர். அதில் சில தலைவர்கள் இன்னும் சிறையில் உள்ளனர்.
பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில், அமலாக்கத்துறை எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. சுமார் 55 மணி நேரம் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அப்போது சிவபெருமான் படத்தை எடுத்து காட்டிய ராகுல், எதிர்க்கட்சிகள் சிவனிடம் இருந்து தான் இந்தியாவை பாதுகாப்பதற்கான உத்வேகத்தை எடுத்து கொண்டதாக கூறினார். இதில் உள்ள பாம்பு தைரியத்தையும், திரிசூலம் அகிம்சையையும், அபய முத்ரா காங்கிரஸ் கட்சியின் சின்னத்தையும் குறிக்கிறது.
இப்படி அனைவரும் அகிம்சையை பற்றிதான் பேசியுள்ளனர். ஆனால் தன்னை இந்து என சொல்லிக் கொள்பவர்கள்தான் வன்முறை, பொய், வெறுப்பை பரப்புகிறார்கள். ராகுல்காந்தி சிவபெருமானின் படத்தை எடுத்துக் காட்டியதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடும் கண்டனம் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரான நீங்கள் அவையின் மாண்பை காக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.