Rahul Priyanka Wayanad : வயநாட்டில் ராகுல், பிரியங்கா! வாடிய முகத்துடன் பயணம்! நிர்வாகிகளுக்கு ORDER

Continues below advertisement

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்காக இன்று வயநாடு செல்கின்றனர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270ஐ தாண்டியுள்ளது. இன்னும் 250க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியாமல் உள்ளதால் பலி எண்ணிக்கை உயருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது. மாநில மீட்புக் குழுக்கள் மற்றும் ராணுவம் இணைந்து முழு வீச்சில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும், காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று வயநாடு செல்கின்றனர். 2019 மற்றும் 2024 மக்களவை தேர்தல்களில் ராகுல்காந்திக்கு வெற்றியை தேடி கொடுத்தது வயநாடு தொகுதி. 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் தோல்வியடைந்தாலும் வயநாடு தொகுதி அவரை காப்பாற்றியது. 2024 தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி களமிறங்கவிருக்கிறார். ராகுல்காந்திக்கு வயநாடு தொகுதியுடன் நெருக்கமான உறவு இருப்பதால், பிரியங்கா காந்தியை அந்த தொகுதியில் களமிறக்குகிறார்.

தற்போது வயநாடு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நேரடியாகவே சென்று களப்பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். சம்பவம் நடந்த உடனேயே வயநாடு செல்ல திட்டமிட்டார் ராகுல். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ராகுல், நானும் பிரியங்காவும் நிச்சயமாக வயநாடு வந்து தேவையான உதவிகளை செய்வோம், அங்கு நிலைமை எப்படி உள்ளது என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் இன்று ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் வயநாடு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வயநாடுக்கு செல்லும் ராகுல்காந்தி, பிரியங்கா நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர். மேலும் கேரள காங்கிரஸ் கட்சியினர் மீட்புப் பணிகளுக்கு உதவ வேண்டும் என்றும், மக்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்றும் ராகுல் ஏற்கனவே உத்தரவு போட்டுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram