கூப்பிட்டு அசிங்கப்படுத்துறீங்களா.. மாலை கூட வாங்க மாட்டீங்களா புலம்பிய திமுக MLA

Continues below advertisement

புதுச்சேரியில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வந்த திமுக எம்.எல்.ஏ விக்னேஷ் கண்ணனிடம், அதிகாரிகள் மாலை இல்லை என்றுகூறியதால், "கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்துறீங்களா?" என அதிகாரிகளிடம் அவர் கோபப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அந்த வரிசையில் அதிகாரிகளின் அழைப்பின் பேரில், புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ விக்னேஷ் கண்ணனும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அங்கு வந்தார். அப்போது, அரசு சார்பில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மட்டுமே மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவரிடம் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த திமுக எம்.எல்.ஏ விக்னேஷ் கண்ணன், அங்கிருந்த அதிகாரிகளிடம், “எவ்ளோ வீண் செலவு பண்றீங்க.. எம்.எல்.ஏ-வுக்கு மாலை வாங்கல.. அப்புறம் எதுக்கு போன் பண்ணி கூப்பிடுறீங்க.. கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்துறீங்களா?” என்று கோபப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து எம்எல்ஏவுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவ்விடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola