Preeti Transgender Jan Suraaj | திருநங்கைக்கு சீட்! நிதிஷ்குமாருக்கு PK செக்! யார் இந்த ப்ரீத்தி?|Prashant Kishor | Nitish Kumar | Bihar Election 2025

Continues below advertisement

திருநங்கை ப்ரீத்தி-க்கு சீட் வழங்கி இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளார் பிரசாந்த் கிஷோர். நிதிஷ்குமாரின் வலது கரமான சுனில் குமாரையே எதிர்த்து திருநங்கை ஒருவரை களமிறக்கி ஆளும் கட்சிக்கு எதிர்பாரா ட்விஸ்ட் கொடுத்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.

பீகார் மாநிலத்தில் வரும் நவ-6, நவ-11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெறும் என்றும் நவ-14ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடபடும் என்று தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பீகாரில் தற்போது மூம்முனை போட்டி நிலவுகிறது. அதாவது நிதிஷ்குமார் தலைமையில் பாஜக கூட்டணி ஒரு அணியாகவும், தேஜஸ்வி யாதவ் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஒரு அணியாகவும் மற்றும் பிரசாந்த் கிஷோர் தனித்தும் போட்டியிடுகின்றனர். 

இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் முதற்கட்டமாக 51 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் டாக்டர்கள், இங்ஜினியர்கள், வழக்கறிஞர்கள், முன்னாள் புலனாய்வு துறை அதிகாரிகள், போலீஸ்காரர்கள் போன்றோர் பெயர்கள் அதிக அளவில் இருப்பது பேசு பொருளாகியுள்ளது. மேலும் திருநங்கை ஒருவருக்கும் சீட் வழங்கி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். 

பிரசாந்த் கிஷோர் தேர்தெடுத்த திருநங்கை ப்ரீத்தி யார் என்று சமூக வலைதளங்களில் அனைவரும் தேடி வருகின்றனர். பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்யாண்பூர் கிராமத்தில் வசிக்கும் ப்ரீத்தி நீண்ட காலமாகவே அந்த பகுதியில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் போரேல் தொகுதியின் வேட்பாளராக ப்ரீத்தி அறிவிக்கப்படுள்ளார். இவர் போட்டியிடும் தொகுதி ஒரு நட்சத்திர வேட்பாளர் தொகுதியாகும். அதாவது நிதிஷ்குமாரின் வலதுகரமாக அறியப்படும் கல்வித்துறை அமைச்சர் சுனில் குமாரை எதிர்த்து களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் நிச்சயம் அமைச்சர் சுனிலை வீழ்த்துவார் என்று நம்புகிறனர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சியினர். 

இதுதொடர்பாக பேசிய திருநங்கைகள் ப்ரீத்தி-க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் நிச்சயம் தேர்தலில் வென்று அமைச்சராக வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். வேட்பாளர் தேர்வு குறித்து பேசிய ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர், நான் தேர்தெடுத்துள்ள வேட்பாளர்கள் மக்கள் பிரச்சனைக்காக தினந்தோறும் பாடுபடுபவர்கள் ஆகவே இவர்களை தங்கள் பிரதிநிதியாக மக்கள் தேர்தெடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். 

பிரசாந்த் கிஷோர் ஆரம்பகாலத்தில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அதனால் வியூகம் அமைத்து அவர் தேர்தெடுத்துள்ள வேட்பாளர்கள் களத்தில் கடுமையான போட்டியை உருவாக்குவார்கள் என பீகார் கள நிலவரங்கள் சொல்கின்றன. 

இந்தியாவில் திருநங்கைகள் பல ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட்டாலும் பெரும்பாலும் வெற்றி பெற்றதில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கூட ஒரு திருநங்கை சுயேட்சையாக போட்டியிட்டு 85 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

அதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 3 திருநங்கைகள் போட்டியிட்டனர். ஆனால் அவர்கள் டெபாசிட் கூட வாங்காதது அந்த சமூக மக்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. இந்தநிலையில் பீகாரில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள திருநங்கை நிச்சயமாக வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola