யார் வந்தேறி? ரொம்ப நக்கலா?” நிர்மலா ருத்ரதாண்டவம்! பொங்கி எழுந்த திமுக MPக்கள்

Continues below advertisement

ஹிந்தியை திணிப்பதாக எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்

அதனை நான் பாராட்டுகிறேன்

யாராலும் யார் மீதும் எதையும் திணிக்க முடியாது

அதனால் தான் பிரதமர் மோடியும் ஏக் பாரத் என்று சொல்லி அனைத்து மாநிலங்களும் சொந்த மொழிகளை கற்க ஊக்குவிக்கிறார்

உயர்கல்வி, பொறியியல், மருத்துவம் என பிராந்திய மொழிகளில் கற்க வேண்டும் என சொன்ன முதல் பிரதமர் மோடிதான்

தமிழ்நாட்டிலும் தமிழ் மொழியில் மருத்துவம் படிக்க முடிவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது

முதலில் ஹிந்தி என சொல்லிவிட்டு தமிழ் என்று மாற்றி சொன்ன நிர்மலா சீதாராமன்

நான் ஹிந்தியில் பேசிவிட்டதால் என் மீது திணிக்க பார்க்கிறீர்களா

நான் உங்களுடைய தமிழுக்கு ஆதரவாக தான் பேசுகிறேன்; என்னுடைய தமிழ்

சரி, நம்முடைய தமிழ். சின்ன சின்ன விஷயங்கள் பற்றி வாக்குவாதம் செய்ய வேண்டாம்

தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த அனுபவத்தை பற்றி பேசுகிறேன்

நான் ஹிந்தி கற்க செல்லும் போது எனது பள்ளியை தவிர மற்ற இடங்களில் ஏளனம் செய்யப்பட்டேன்

தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு இந்த உப்பை சாப்பிட்டுக் கொண்டு ஹிந்தி கற்க வேண்டுமா என கிண்டல் செய்தார்கள்

வட இந்தியர்களின் மொழியை கற்க வேண்டுமா என கேட்டார்கள்

அந்த வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது

இதையெல்லாம் செய்தது யார்?

அரசியல் கட்சியினரின் ஆதரவினால் மற்ற மொழிகளை கற்றவர்கள் விமர்சிக்கப்பட்டனர்

அவர்கள் நம்மை வந்தேறிகள் என்று சொல்வார்கள்

தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? நான் ஹிந்தி கற்றால் அதில் என்ன தவறு? 

அவர்கள் வந்தேறி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்

அது இங்கு இருக்கும் அரசியல் வியூகம் தானே?

என்னை ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு என் மீது திணித்தது

அது திணிப்பு இல்லையா?

எனக்கு என்ன மொழி வேண்டுமோ அதை நான் கற்றுக் கொள்கிறேன்

அதில் என்ன பிரச்னை

நான் புறநானூறையும், திருவள்ளுவரையும் மேற்கோள் காட்டுகிறேன்

தமிழ் மீது எனக்கு எந்த அளவு அன்பு இருக்கிறதோ அதே அளவு மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதிலும் இருக்கிறது

ஹிந்தி திணிப்பு கூடாது என்று சொல்வது சரியென்றால், நான் ஹிந்தியை கற்றுக் கொள்ளக் கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்

நான் இதை பற்றி கேட்க விரும்புகிறேன்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram