PM Modi First Signature : பதவியேற்ற அடுத்த நாளே!மோடியின் முதல் கையெழுத்து எதற்காக தெரியுமா?

Continues below advertisement

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி விவசாயிகளுக்காக ரூபாய் 20 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கி தனது முதல் கையெழுத்து இட்டுள்ளார்.

மோடியின் கடந்த ஆட்சியில் பா.ஜ.க.வின் ஆட்சிக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக, வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடுமையான போராட்டம் நடத்தினர். ஆனாலும், அப்போது மோடி தலைமையிலான அரசு அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

 

விவசாயிகள் மரணம், விவசாயிகள் போராட்டம் போன்றவை வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, இந்த முறை பா.ஜ.க.வால் தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை என்றும் கருதப்படுகிறது. இந்த சூழலில், 3வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தாங்கள் விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பதற்காக பி.எம்.கிஷன் நிதி திட்டத்திற்கு நிதியை ஒதுக்கி தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார் என்று அரசியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

 

பிரதமர் மோடி பதவியேற்ற உடனே அவர் பி.எம். கிஷன் நிதி திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதற்கான நிதியை ஒதுக்கி தனது முதல் கையெழுத்தை இட்டார். பிரதமரின் கிஷன் நிதி திட்டம் என்பது மத்திய வேளாண்துறையின் கீழ் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்குவது ஆகும்.

இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு தவணையாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி தனது கையெழுத்தாக அந்த திட்டத்திற்கான 17 வது தவணை தொகையாக ரூபாய் 20 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளார். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு தவணையாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி தனது கையெழுத்தாக அந்த திட்டத்திற்கான 17 வது தவணை தொகையாக ரூபாய் 20 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளார். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram