Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்து

முகலாய மன்னர் ஔரங்கசீப் கல்லறையை வைத்து மகாராஷ்டிர மாநிலமே பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்து அமைப்புகள் வேண்டுமென்றே இஸ்லாமியர்களை குறிவைத்து வன்முறையை கிளப்புவதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

 


கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட மாட்டார்கள். அந்த தினத்தில் தான் கர சேவகர்கள் என்று சொல்லப்படுக்கூடிய இந்துத்துவவாதிகளால் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாஜகவின் முக்கிய அரசியல் கொள்கைகளில் ஒன்று அந்த இடத்தில் இராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது தான். இதற்கான ரத யாத்திரை இந்தியல் முழுவதும் அப்போது பாஜகவின் தலைவராக இருந்த அத்வானியால் மேற்க்கொள்ளப்பட்டது. 

இதற்கு தீவிர வலது சாரி இயக்கங்களான விஸ்வ இந்து பரிசத், அனுமன் சேனா, ராஸ்டீரிய ஸ்வயம் சேவக் சங்கம் உள்ளிட்டவை பின்னணியில் இருந்தன. இதனைத் தொடர்ந்து பல்வேறு சட்ட போரட்டங்களுக்குப் பிறகு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

பாஜகவின் முக்கிய அரசியல் கொள்கைகளில் ஒன்றான இதன் மூலம் வட மாநிலங்களில் பாஜக வளர்ச்சி அடைந்ததோடு மக்களை மத ரீதியாக பிரிப்பதாகவும் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் தான் தற்போது இந்து அமைப்புகள் புதிய மத அரசியலை கையில் எடுத்துள்ளது. இந்த முறை உத்தரபிரதேசத்தில் இல்லை பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மகாராஷ்டிராவில். அதாவது மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி மாவட்டத்தில் உள்ள முகாலய மன்னர்  ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று பாஜக அமைச்சர்களும் இந்து அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த போராட்டம் தான் தற்போது வன்முறையாக மாறியுள்ளது.


முன்னதாக கடந்த மாதம் ஹிந்தியில் வெளியான CHHAAVA என்ற திரைப்படத்திற்கு பிறகு தான் இந்த பிரச்சனை  ஆரம்பம் ஆனதாக சொல்லப்படுகிறது, இந்த படத்தில் சத்ரபதி சிவாஜியின் மகனான சாம்பாஜியை ஔரங்கசீப் கொடுமைபடுத்தி கொலை செய்வதாக காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இதன் பின்னர் தான் சத்ரபதி சிவாஜியின் வம்சாவளியான  நாடாளுமன்ற உறுப்பினர் உதயன் ராட்சே போட்சாலே இவ்வளவு கொடுமைகளை இந்துக்களுக்கு செய்த  ஔரங்கசீப்பின் கல்லறை ஏன் இந்த மண்ணில் இருக்க வேண்டும் என்று கொளித்திப் போட இப்போது மகாராஷ்டிரா மாநிலமே பற்றி எறிகிறது. 


இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகளில் இந்து அமைப்புகல் கல் வீசியும், பெட்ரோல் குண்டுகளை எறிந்தும் வன்முறையில்  ஈடுபட்டு வருகின்றன.

 

வேண்டுமென்று இந்து அமைப்புகள் இஸ்லாமியர்களை குறிவைத்து வன்முறையை கிளப்புவதாக சமூக வலைதளங்களில் கண்டங்கள் குவிந்து வருகின்றன. 


மறுபுறம் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “நாக்பூர் ஒரு அமைதியான நகரம், இங்கு மக்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் பகிர்ந்து கொள்கிறார்கள், இது எப்போதும் நாக்பூரின் பாரம்பரியமாகும். எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola