Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்
மஹாராஸ்டிரா மாநிலம் நாக்பூரில் பெண் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது கணவர் தனது மனைவியின் சடலத்தை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஸ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள டியலோபர் பகுதி அருகே தம்பதி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் ஒன்று அந்த தம்பதியின் பைக் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
இதனையடுத்து அவ்வழியாக வாகனங்கள் எதுவும் உதவிக்கு வராத நிலையில், கனமழையில் அப்பெண்ணின் கணவர் செய்வதறியாது மனைவியின் உடலை தனது இருசக்கர வாகனத்தில் கட்டி ஓட்டிச்சென்றார். நெடுஞ்சாலையில் பெண்ணின் சடலத்துடன் பைக்கை ஓட்டி சென்ற நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டோல்கேட் பகுதியில் போலீசார் அவரை நிறுத்த முற்பட்டும் வண்டியை நிறுத்தாமல் வீட்டுக்கு சென்றுள்ளார் மனைவியை இழந்த கணவர். இதனையடுத்து அவரை பின்பற்றி சென்ற காவல்துறையினர் ஒருவழியாக அவ்விருவரின் விவரங்களை கண்டுபிடித்தனர்.
அதில் அப்பெண்ணின் பெயர் ஜியார்சி யாதவ் என்பதும் அவரது வயது 35 என்பதும் அவரது கணவர் அமித் பும்ரா யாதவ் என்பதும் அவரது 35 என்பதும்,,அவர்கள் லோனரா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அப்பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் போஸ்ட் மாடர்மிற்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை விபத்தில் உயிரிழந்த மனைவியை பைக்கின் பின்புறம் கட்டிப்போட்டு கொண்டு சென்ற கணவரின் செயல் காண்போரை கலங்க வைத்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.