Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்

கேரளாவில் பச்சிளம் குழந்தை ஒன்று வீட்டில் இருந்து தவழ்ந்து நடுரோட்டுக்கு வந்த நிலையில், அவ்வழியாக சென்ற பேருந்தை இயக்கி சென்ற ஓட்டுநர் உடனடியாக சடென் பிரேக் போட நடத்துநர் இறங்கி சென்று குழந்தையை தூக்கி வீட்டில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் மலப்புரம் புலிக்கல் பகுதியில் சாலை அருகே சில வீடுகள் அமைந்துள்ளன. அதில் ஒரு வீட்டில் உள்ள பச்சிளம் குழந்தை பெற்றோர் அசந்த நேரம் பார்த்து தவழ்ந்துகொண்டே நடுரோடு வரை வந்துவிட்டது. இந்நிலையில் அவ்வழியாக வேகமாக பேருந்து ஒன்று சென்றது. அப்போது சாலையில் சாவுகாசமாக அமர்ந்திருந்த குழந்தையை கண்டு அதிர்ந்த ஓட்டுநர் உடனடியாக சடென் பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தினார். பின்னர் நடத்துநர் கீழே இறங்கி சின்று குழந்தையை தூக்கி வீட்டில் ஒப்படைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெற்றோர் அசந்த நேரம் பார்த்து குழந்தை சாலைக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சரியான நேரத்தில் கடவுள் போல் வந்து குழந்தையை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் குழந்தைகளை கண்காணிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தி வருகின்றனர்

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola