Mukesh Ambani on Ratan Tata | ”உயிர் நண்பனை இழந்துட்டேன்” என்னால் தாங்க முடியவில்லை!
ரத்தம் டாடா மறைந்த செய்தி கோடிக்கணக்கான இந்தியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த செய்தியை அறிந்த ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்.
இந்நிலையில் ரத்தன் டாட்டாவின் மறைவு குறித்து செய்தி வெளியிட்டுள்ள முகேஷ் அம்பானி
இந்தியர்களுக்கு இது ஒரு சோகமான நாள். ரத்தன் டாடாவின் மறைவு, டாட்டா குழுமத்திற்கு மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியர்களுக்கான இழப்பு.
தனிப்பட்ட முறையில் ரத்தம் டாடாவின் மறைவு என்னை கடுமையான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்னுடைய உயிர் நண்பரை நான் இழந்துவிட்டேன். அவருடன் நான் பேசிய ஒவ்வொரு சந்திப்புகளும் என்னை ஊக்கப்படுத்தியுள்ளது, உத்வேகப்படுத்தியுள்ளது. ஒரு மனிதனாக அவர் கொண்டிருந்த குணாதிசயங்களும் உயர்ந்த பண்புகளையும் தான் என்றென்றும் மதிக்கிறேன்.
இரத்தம் டாடா ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தொழிலதிபர், பரந்துபட்ட சிந்தனை கொண்டவர். எப்போதுமே சமூகத்தின் முன்னேற்றத்திற்கான பார்வையை கொண்டவர்.
இந்தியா கனிந்த மனம் கொண்ட தனது மகனை இழந்து விட்டது. ரத்தம் டாடாவை இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் எடுத்துச் சென்றார், உலகின் சிறந்த விஷயங்களை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். 1991 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் தலைவராக அவர் பொறுப்பேற்ற பின், 70 மடங்கு டாட்டா நிறுவனம் சர்வதேச அளவில் வளர்ந்தது.
ரிலையன்ஸ் குழுமத்தில் சார்பிலும், என்னுடைய சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை டாடா குடும்பத்திற்கும் டாட்டா குழுமத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரத்தன் நீங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள்.
என்று முகேஷ் அம்பானி ரத்தம் டாடா மறைவிற்கு தன்னுடைய சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தொழில் களத்தில் போட்டியாளர்களாக இருந்தாலும் சக தொழிலதிபர்களும் போற்றும் ஒரு நபர் ரத்தம் டாட்டா என்பதற்கு முகேஷ் அம்பானியின் இந்த பதிவை எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.