Mohammed Siraj : DSP அவதாரம் எடுத்த சிராஜ்! கெத்து காட்டும் கிரிக்கெட் வீரர்! இனி ரவுடிகள் ஜாக்கிரதை

Continues below advertisement

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெலங்கானாவில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநரிடம் துணைக் காவல் கண்காணிப்பாளராக அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். முகமது சிராஜுக்கு குரூப்-1 அரசு பதவி வழங்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முகமது சிராஜுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார். முதல்வர் ரேவந்த் ரெட்டி, எதிர்கால திறமைகளை வளர்ப்பதற்காக, விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளார். இது தவிர, தெலங்கானா அரசு, முகமது சிராஜுக்கு சாலை எண் 78, ஜூப்ளி ஹில்ஸில் 12 செண்ட் நிலத்தையும் ஒதுக்கியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மார்ச் 13, 1994 ஆம் ஆண்டில் பிறந்த முகமது சிராஜ், வலது கை வேகப்பந்து வீச்சாளர். முகமது சிராஜ் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர்.

இவர் 19 வயதில் கிளப் கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கினார். இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். ஆசியக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram