Trump vs Modi : ’’இனி ட்ரம்ப் காலி !’’கைகோர்த்த இந்தியா சீனா!மோடி பக்கா ஸ்கெட்ச்
அமெரிக்க இந்தியா வர்த்தக போர் நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தனிப்பட்ட முறையில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதாக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சீனா சென்றுள்ளார். எல்லை பிரச்சனைகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் எலியும் பூனையுமாக இருந்து வந்த இந்தியா சீனா அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பால் தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.பிரதமர் மோடியை புன்னகையுடன் வரவேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் யானையும் டிராகனும் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டதாக இந்தியா சீனா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்
சீனா சென்ற பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 40 நிமிடம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எல்லை பிரச்சனைகள் முதல் வரி விதிப்பு வரை பல முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு உலகிலேயே மிக அதிகமான 50 சதவீத வரியை விதித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது வர்த்தக ரீதியில் இந்தியாவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் தான் முன்னதாக சீனாவுக்கு 145 சதவீத வரியை விதித்தார் டிரம்ப். பதிலுக்கு சீனா அமெரிக்காவுக்கு 135 சதவீத வரியை விதிக்க உடனடியாக தனது வரிவிதிப்பை நிறுத்தி வைத்த டிரம்ப் 30 சதவீத வரியை மட்டும் போட்டார்.
இதனையடுத்து ரஷ்யா மீதான கோபத்தில் இந்தியாவுக்கு கடுமையான வரியை விதித்துள்ளார் டிரம்ப். இந்நிலையில் அமெரிக்காவின் பரம எதிரியாக பார்க்கப்படும் சீனாவுடன் இந்திய நட்பு பாராட்டி காய் நகர்த்தியுள்ளது உலக அரசியலில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு கல்வானில் எல்லை பிரச்சனை ஏற்பட்டது. இந்தியா - சீனா வீரர்கள் மோதிக்கொண்டதோடு, உயிரிழப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியா - சீனா உறவு மோசமானது. இருநாடுகளின் தலைவர்கள் இடையேயான உறவு முற்றிலுமாக முறிந்தது.
இப்படியான சூழலில் தற்போது டிரம்பின் வரிவிதிப்பு இந்தியா சீனாவை ஒன்று சேர்த்துள்ளது. மேலும் ரஷ்ய அதிபர் புடினும் விரைவில் சீனா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சீனாவுடன் சேர்ந்து பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவின் நட்பு நாடாக இருந்த அமெரிக்கா தற்போது எதிரி நாடாக பார்க்கப்பட்ட சீனாவுடன் இந்தியாவை ஒன்றினைத்ததன் பின்னணியில் அமெரிக்க அதிபர் டிரம்பின் சில சுயநலமான செயல்பாடுகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நடந்த ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி சில தாக்குதல்களும் அரங்கேறியது. இதனையடுத்து இரு நாடுகளும் போர் நிறுத்த அறிவிப்பையும் வெளியிட்டது. அப்போது டிரம்ப் தான் தான் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக காட்டிக்கொண்டது மோடியின் கோபத்தை தூண்டியதாக அமெரிக்க நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை பெறத்தான் டிரம்ப் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து இந்தியா பாராளுமன்றத்திலேயே டிரம்பின் கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்க உடனடியாக வரிவிதிப்பை உயர்த்தினார் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.