Kolkata Doctor Case : கலவரமான நீதி போராட்டம்.. மம்தாவின் MOVE என்ன? பதற்றத்தில் மேற்குவங்கம்

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக கோரி மாணவர் அமைப்புகள் நடந்த பேரணியில் போலீசருக்கும் மாணவர் அமைப்புகளுக்கு இடையே ஏற்ப்பட்ட மோதல் சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்ய்ப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருந்தது

இந்த நிலையில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டும், இந்த சம்பவத்துக்கு  அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பொறுப்பேற்று  பதவி உலக கோரி மாணவ அமைப்புகள் மேற்கு வங்க தலைமை செயலகமான நபன்னா நோக்கி பேரணி நடத்தினர். இதற்காக அம்மாநில அரசு தலைமை செயலக பகுதியை சுற்றி 2100 போலீசாரை பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டுத்தியிருந்தனர்.

அப்போது தலைமை செயலகம் பகுதியை சென்றடைந்த  மாணவ அமைப்பினர்  போலீசர் தடுப்பாக வைத்திருந்த barricade-களை தாண்டி செல்ல முயன்றனர். இதனால் அவர்கள் தலைமை செயலக பகுதிக்கு செல்வதை  தடுக்க காவல்துறையினர் தடி அடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கலைக்க முயன்று வருகின்றனர்.

மாணவ அமைப்புகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த இந்த மோதலால் அப்பகுதியில் பரப்பரப்பான சூழல் நிலவி வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola