பேச விடாத எதிர்க்கட்சியினர்! கடுப்பாகி எழுந்த அமைச்சர்! கண்டித்த சபாநாயகர்

மக்களவை தொடங்கியதில் இருந்து பாஜகவினரை பேசவிடாமல் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியல் ஈடுபட்டதால் அமைச்சர் கிரண் ரிஜுஜு கோபமாக எழுந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மக்களை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள், மகா கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என இருக்கையில் இருந்து எழுந்து முழக்கங்களை எழுப்பினர். கேள்வி நேரத்தின் போது இதை பேசலாம் என சபாநாயகர் மறுத்ததால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மற்றும் சபாநாயகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்தநிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் கோஷங்களுக்கு நடுவிலேயே அவை நடந்து வருகிறது. பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் அடுத்தடுத்து எழுந்து பேசி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினர் முழக்கங்களை தொடர்ந்து எழுப்பி வருவதால் ஆத்திரமடைந்த அமைச்சர் கிரண் ரிஜுஜு எழுந்து அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.

தங்களுடைய பிரச்னைகளை பற்றி பேச வேண்டும் என்று தான் மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்து மக்களவைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள், ஆனால் இவர்கள் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடாமல் அமளியில் ஈடுபடுவதால் மக்களே எதிர்க்கட்சியினரை பார்த்து கேள்வி கேட்பார்கள். கேள்வி நேரத்தின் போது பேச வேண்டியதை பேசாமல் அமளியில் ஈடுபடுவதை கடுமையான கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கங்கள் எழுப்புவதை நிறுத்தாததால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola