எங்க அப்பா பார்த்துப்பாருவேகமாக வந்து மோதிய கார்.. பறிபோன 3 உயிர்கள்

Continues below advertisement

கேரளாவில் வேகமாக காரை ஓட்டிச் சென்று 3 பேரை இடித்து கொன்ற இளைஞர் இந்த விஷயத்தை என்னுடைய அப்பா பார்த்துக் கொள்வார் என திமிராக பேசியது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெடும்பசேரி எனும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஒரே நிறுவனத்தில் பணி புரியும் மூன்று பேரும் அருகில் உள்ள டீ கடைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். கொச்சி விமான நிலையத்தை நோக்கி செல்லும் சாலையில் அவர்கள் பயணித்து கொண்டிருந்த போது மினி கூப்பர் கார் ஒன்று அதிவேகமாக வந்து கண்னிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் 3 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயமடைந்துள்ளனர். அதோடு காருக்கு அடியில் சிக்கிய ஸ்கூட்டர் 100 மீட்டர் தூரம் வரையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த வயநாட்டைச் சேர்ந்த 21 வயதான தேவிகா, பாலக்காட்டைச் சேர்ந்த 22 வயதான கோபிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த 21 வயதான் இஜாஸ் அக்கம்பக்கத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய நபர் 19 வயதே ஆன சுஹைல் சஜீவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து நேர்ந்த போது அந்த நபர் போதையில் இருந்துள்ளார். 3 பேரின் உயிரை பறித்துவிட்டு இந்த விஷயத்தை எனது அப்பா பார்த்துக் கொள்வார் என அந்த இளைஞர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. விபத்து நேரத்தில் அந்த கார் மணிக்கு சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுஹைலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சுஹைலை மருத்துவப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, உயிரிழந்த நபர்களின் நண்பர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். விபத்து தொடர்பான பதறவைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola