கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!

Continues below advertisement

கேரளாவில் ஒன்றரை வயது குழந்தையின் மரணம் மாநிலத்தையே உலுக்கியிருக்கிறது. குழந்தையின் தாய் தனது காதலனுடன் சேர்ந்து கொடுஞ்சித்ரவதைகள் செய்து குழந்தையைக் கொன்றது பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த தம்பதி அகிலா மற்றும் அகில். இவர்களுக்கு அர்ஷித் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் குழந்தையின் தந்தை 2024-ல் உயிரிழந்தார். அதேவேளையில், அகிலாவுக்கு அஷ்கர் (31) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது லிவ்-இன் உறவாக மாறியது.

அகிலா தனது குழந்தையுடன் அஷ்கரோடு ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தான், மே 29-ம் தேதி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது குழைந்தை திடீரென மயங்கி விழுந்திருக்கிறது.

குழந்தையை அஷ்கர் உடனே திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு குழந்தைக்கு என்ன ஆனது என்று மருத்துவர்கள் கேட்டபோது, குழந்தை சாப்பிடும்போது தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டதாக அஷ்கர் கூறியிருக்கிறார்.

ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே குழைந்தை இறந்துவிட்டதால் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

அதனால் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக திருவனந்தபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தது.

புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்போது பிரேத பரிசோதனையில் வந்திருக்கும் முடிவுகள் தான் கேரளாவையே அதிர்ச்சிக்குள்ளக்கியிருக்கிறது.

அதில், குழந்தையின் தலையை சுவரிலோ அல்லது தரையிலோ அடித்தது போன்ற காயங்கள், சிகரெட் சூடு என குழந்தையின் உடலில் 51 காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை தெரியவந்திருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், இரண்டு Vlogger எடுத்த வீடியோவில் அகிலா தனது குழந்தையுடன் தோன்றினார்.

அந்த வீடியோவில் குழந்தையின் இரு கைகளிலும் கட்டு போடப்பட்டிருந்தது. அந்த விடியோவிலேயே குழந்தைக்கு என்ன ஆனது என்று கேட்கும்போது, குழந்தை சைக்கிளில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக அகிலா கூறியிருக்கிறார்.

ஆனால், தற்போது பிரேத பரிசோதனை முடிவுகளுடன் தொடர்புபடுத்தி பார்க்கும்போது, அகிலாவும் அஷ்கரும் சேர்ந்து சித்ரவதை செய்து குழந்தையின் கைகளை உடைத்ததாகத் தெரிகிறது.

இதனால், போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியபோதுதான், தங்களின் உறவுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால் இருவரும் சேர்ந்தே குழந்தையை கொன்றது தெரியவந்திருக்கிறது.

அதைத்தொடர்ந்து அகிலா, அஷ்கர் இருவரையும் போலீசார் கைதுசெய்தனர். தற்போது, இந்த வழக்கு நெடுமங்காடு DSP தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், குழந்தையின் உடல் தந்தையின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட இருவருக்கும் கடும் தண்டனை விதிக்க வேண்டும் எனக் கொந்தளிக்கும் மக்கள், குழந்தை பாதுகாப்பில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola