Kanwar Yatrai : கன்வார் யாத்திரை வழக்கு..பாஜக கூட்டணிக்குள் குழப்பம்? அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்
வட மாநில இந்துக்கள் மேற்கொள்ளும் கன்வார் யாத்திரையின் போது பக்கதர்களின் புனித தன்மையை பாதுகாப்பதற்காக என பாதைகளில் உள்ள உணவகங்களுக்கு கடை வைத்திருப்போர் தங்களது பெயர்களை எழுதி வைக்க வேண்டும் என்று உத்தர பிரதேச அரசுயிட்ட சர்சைக்குரிய ஆணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அதிரடி உத்திரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹாரித்வார் உள்ளிட்ட ஜூலையில் பக்தர்கள் மேற்கொள்ளும் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.புனித தலங்களுக்கு சென்று அங்கு ஓடும் கங்கைநதியில் இருந்து புணித நீரை கொண்டு வந்து தங்கள் ஊர் சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்வதே இந்த யாத்திரையின் நோக்கம். கன்வார் யாத்திரை இன்று துவங்குகிறது. இந்த யாத்திரையை மேற்கொள்ளும் பாதைகளில் உள்ள உணவகங்களின் பெயர் பலகைகளில் கடை உரிமையாளரின் பெயரும் இடம் பெற வேண்டும் என்று உத்தரப்பிரதேசம் மற்றும் உத்திராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளனர். அதாவது பக்தர்கள் வசதிக்காக அவர்கள் செல்லும் வழியில் பலர் தற்காலிக உணவு மையம் அமைப்பது வழக்கம். இந்த முறை அப்படி உணவு கூடம் அமைப்பவர்கள் தங்கள் உரிமையாளரின் பெயர், முகவரி, செல்போன் ஆகியவற்றை கடைகளில் நன்றாக தெரியும்படி கடை போர்டுகளில் எழுத வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர். திடீரென கடைகளில் உரிமையாளர் பெயர் மற்றும் அனைத்து விவரங்களையும் பதிவிட உத்தரவிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் இந்த முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மேலும் பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இந்த உத்தரவுக்கு எதிராக தன்னார்வ நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. உத்திரபிரதேச அரசின் உத்தரவு இஸ்லாமிய கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது சமூக ரீதியிலான பொருளாதார புறக்கணிப்பை உருவாக்கியுள்ளதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க செய்யும் முயற்சி என்றும் இந்திய கூட்டணி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பக்கதர்களின் புனித தன்மையை பாதுகாக்க இந்த உத்தரவு இருப்பது பாஜக கூட்டணி கட்சியினரை அதிருப்திக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடதக்கது.