ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar

குடியரசு துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, ஜெகதீப் தன்கர் எங்கே? சென்றார் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன.  தற்போது அவர் எங்கே? சென்றார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் முடிவிலேயே திடீரென பதவியை ராஜினாமா செய்த பிறகு, கடந்த ஒரு மாத காலமாக ஜெகதீப் தன்கர் என்ன ஆனார்? எங்கு இருக்கிறார்? என்பது மர்மமாகவே இருந்தது. இந்நிலையில் தான் அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, குடியரசு துணை தலைவர் இல்லத்தில் தொடர்ந்து வசித்து வருவதோடு, தொடர்ந்து யோகா பயிற்சி செய்துகொண்டும், நலம் விரும்பிகள் உடன் சேர்ந்து டேபிள் டென்னிஸ் விளையாடியும் வருகிறாராம். வழக்கமான வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்து வீடு திரும்பும்போதும், தனது ஊழியர்களுடன் சேர்ந்து டேபிள் டென்னிஸ் விளையாடுவது வழக்கமாம்.

உடல்நல குறைபாட்டை காரணமாக குறிப்பிட்டு பதவியை ராஜினாமா செய்த பிறகு, ஜெகதீப் தன்கர் எங்கே போனார் என்பது பொதுமக்களின் கேள்வியாகவும் இருந்தது. எனவே, முன்னாள் குடியரசு துணை தலைவர் நலமுடன் இருப்பதை, உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத்தன. உடல்நலனே காரணம் என அவர் கூறினாலும், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால், பாஜகவின் அழுத்தத்தின் பேரிலேயே  தன்கர் ராஜினாமா செய்ததகாவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. சுதந்திர இந்தியா வரலாற்றில் விவி கிரி மற்றும் ஆர். வெங்கட்ராமனுக்கு பிறகு, பதவிக்காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்த குடியரசு தலைவர் பட்டியலில் தன்கர் இடம்பெற்றார். இந்நிலையில் தான், அவர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து இன்னும் வெளியேறவே இல்லை என்ற தகவல் கசிந்துள்ளது.

இதனிடையே, புதிய குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளனர். பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா முன்னாள் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபத்இ சுதர்ஷன் ரெட்டியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், சி.பி. ராதாகிருஷ்ணன் அடுத்த குடியரசு துணை தலைவராவது உறுதி என கூறப்படுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola