Modi vs Nitin Gadkari : நிதின் கட்காரியை தோற்கடிக்க சதி? பின்னணியில் மோடி - அமித்ஷா? புகைச்சலில் பாஜக!
பாஜகவுக்குள் சில சீனியர் தலைவர்களுக்கும், மோடி அமித்ஷா கூட்டணிக்கும் இடையே கடுமையான புகைச்சல் நிலவு வருவதாகவும், அதன் காரணமாக யோகி ஆத்யநாத், நிதின் கட்காரி இன்னும் சில பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக நிதின் கட்காரி இம்முறை நாக்பூரில் தோற்கடிக்க சதி நடைபெற்று வருவதாக தி வயர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது..
பாஜகவை பொறுத்த அளவில் பிரதமர் மோடி, தனக்கு அடுத்தபடியாக கட்சிக்குள் யாரும் வளர்ந்து விடக்கூடாது என்பது தீவிரமாக பணியாற்றி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட வருகின்றது. அந்த வகையில் மோடிக்கு அடுத்தபடியாக பாஜகவுக்குள் தனிப்பட்ட செல்வாக்கு மிக்க வரும், ஆர் எஸ் எஸ் பின்புறமும் கொண்ட மிக முக்கியமான தலைவராக வலம் வருகிறார் நிதின் கட்காரி.
இதன் காரணமாக நிதின் கட்காரி மற்றும் மோடி இடையே கோல்ட் வார் நிலவி வருவதாக நீண்ட நாட்களாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக சிவசேனா கட்சியில் தலைவர் சஞ்சய் ராவுத் நன்மைகள் மோடி அமித்ஷா மற்றும் தேவேந்திர பத்நாவிஸ் ஆகியோர் கட்கரியை தோற்கடிக்க தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், பட்னாவிஸ் தரப்பில் அதிக அளவிலான தொகை இதற்காக செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது எரியும் தீயில் எண்ணெயை ஊற்றி புகைச்சலை அதிகப்படுத்தி உள்ளது.
சில விஷயங்களை கூர்ந்து நோக்கினால், இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது. மூன்றாவது முறையாக நித்தின் கட்காரி நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் ஆனால் நாக்பூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களின் மோடி அமித்ஷாவின் புகைப்படங்களை உள்ளன நித்தின் கற்காரியின் புகைப்படம் திட்டமிட்டு பெரும்பாலான போஸ்டர்களில் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரங்களில் பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த மிதின் கட்காரி இந்த முறை நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளார்.
இது அனைத்திற்குமே காரணங்கள் இருக்க தான் செய்கின்றன, நிதின் கட்காரியை பொறுத்த அளவில் மிகப்பெரிய தொழில் அதிபர். பணம் பதவி இது இரண்டையுமே தாண்டி தன்னுடைய கொள்கைக்காக அரசியலில் களமாடுபவர். யாராக இருந்தாலும் ஏன் மோடியாக இருந்தாலுமே மனதில் தோன்றியவை அப்படியே பேசுபவர். பாஜகவின் இளம் தேசிய தலைவரும் இவர்தான், ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு பெரும்பாலான நிதி இவரிடம் இருந்து செல்கிறது என்பதால் எப்போதுமே ஆர் எஸ் எஸ் குட் புக்கில் முதலிடத்தில் இருப்பவர்.
இது அனைத்தும் தான் மோடியை எங்கே நிதின் கட்காரி வளர்ச்சி நம் அரியணையை ஆட்டம் காண வைத்து விடுமோ என்று யோசிக்க வைக்கிறது.
மேலும் குஜராத் vs மகாராஷ்டிரா என்ற லாபியும் இதன் இடையே இருக்கிறது, மோடி அமித்ஷா இருவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள், இந்த வளர்ச்சி திட்டங்கள் ஆக இருந்தாலும் முதலில் அது குஜராத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை குஜராத்தில் கட்டமைப்பது தொடங்கி, இந்திய பொருளாதாரத்தில் குஜராத் பணக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துவது வரை அனைத்துமே குஜராத் மயமாக மாறி வருகிறது.
ஒருவேளை மிதுன் கடற்காரி பவர்ஃபுல் ஆக இருந்தால் இதனை தட்டி கேட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும் அதுவும் அவரை வளர விடாமல் தடுப்பதற்கான மிக முக்கியமான காரணம்.
இந்நிலையில் தான் நிதின் கட்காரையும் தனக்கு எதிராக சதி நடப்பதை உணர்ந்துள்ளதாக தெரிகிறது, அண்மையில் யோகி ஆதித்யநாத் நிதின் கட்காரியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசி இருந்தார். மேலும் ஆர் எஸ் எஸ் தலைவர்களும் நித்தின் கற்காரிக்கு ஆதரவாக காய்களை நகர்த்தி வருகின்றனர்.
ஆகவே வருகிற மக்கள்வைத் தேர்தலில் மூன்றாவது முறையாக நித்தின் கட்காரி வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை, சவால்களை எதிர்கொண்டு அவர் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதே நேரம் ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காமல் மோடி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால், பிரதமர் பதவி மோடியின் கையில் இருந்து நழுவி நிதின் கட்காரிக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.