Roshni Nadar Profile : அம்பானி, அதானி வரிசையில்..முதல் இந்திய பெண் பணக்காரர்!யார் இந்த ரோஷ்னி நாடார்?

Continues below advertisement

இந்தியாவின் டாப் 3 பணக்காரர்கள் பட்டியலில் முதல்முறையாக இடம்பிடித்த பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார் ரோஷினி நாடார். மேலும் இளம் பணக்காரர் என்ற பட்டத்தையும் பெற்ற ரோஷினியின் மொத்த சொத்து மதிப்பு 2.84 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் HCL நிறுவனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்தியாவின் பணக்காரர்களின் வருடாந்திர தரவரிசை பட்டியலை ஹுருன் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு 9.55 லட்சம் கோடி ஆகும்..இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் கௌதம் அதானி..இவரது சொத்து மதிப்பு 8.15 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில் மூன்றாவது இடத்தை பெண்மணி ஒருவர் பிடித்துள்ளது நாட்டின் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.

டாப் 3 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா. இவர் HCL நிறுவனர் சிவ் நாடாரின் மகள்..தற்போது HCL நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து வருகிறார். இவரது வயது 44. ரோஷினி டெல்லியில் உயர்கல்வியை முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் யுனிவர்சிட்டியில் கம்யூனிகேஷன் துறையில் இளங்கலை பட்டமும் பின்னர் MBA பட்டமும் பெற்றவர். தந்தையின் HCL நிறுவனத்தில் தனது பணியை துவங்கும் முன் இவர் ஊடகத்துறையில் பணியாற்றினார். சர்வதேச செய்தி நிறுவனங்களான  Sky News UK, CNBC, and CNN America ஆகியவற்றிற்கு தயாரிப்பாளராக பணியாற்றியவர் ரோஷினி. 

பின்னர் 2009 இல் HCL டெக்னாலஜிஸுக்கு மாறினார், ஒரு வருடத்திற்குள், அவர் HCL கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்றார். 2025 ஆம் ஆண்டில், அவரது தந்தை தனது பங்கில் 47% ஐ அவருக்கு பரிசளித்தார். அவர் HCL இன் மிகப்பெரிய பங்குதாரரானார்.தரவுகளின் படி, அக்டோபர் 1 ஆம் தேதி நிலவரப்படி, HCL டெக்னாலஜிஸ் ரூ.3.76 லட்சம் கோடி சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. 

குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை, சிக்கர் மல்கோத்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 7 ஆண்டுகள் காதலித்த இந்த தம்பதி 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குவைத்தில் ஒரு தொழில்முனைவோர் குடும்பத்தில் பிறந்த மல்ஹோத்ரா, அமெரிக்காவில் உள்ள பாப்சன் கல்லூரியில் தொழில்முனைவோர் பயின்றார், மேலும் கல்லூரியின் உலகளாவிய ஆலோசனைக் குழுவில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.பின்னர் ஷிக்கர் மல்கோத்ரா ஹோண்டா நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது தான் ரோஷினியுடன் காதல் வயப்பட்டுள்ளார். தற்போது அவர் HCL ஹெல்த்கேரின் துணைத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார், மேலும் HCL கார்ப்பரேஷனில் இயக்குநராகவும் பணியாற்றுகிறார், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறார். 

இந்நிலையில் ரோஷினி நாடார் தற்போது இந்தியாவின் மூன்றாவது பணக்காரர் என்ற பெருமையையும், முதல் பெண் பணக்காரர் என்ற கிரீடத்தையும் இளம் பணக்காரர் என்ற பட்டத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola