History of Ratan Rata | மிஸ்டர் GENTLEMAN.. TATA சாம்ராஜ்யத்தின் அரசன்! ரத்தன் டாட்டாவின் கதை!

Continues below advertisement

உலகில் லட்சக்கணக்கான தொழிலதிபர்கள் இருக்கிறார்கள், ஆனால் வெகுசிலர் மட்டுமே கொண்டாடப்படுகிறார்கள். காரணம் பிசினஸ், லாபம் என்ற ஒற்றை இலக்கை தாண்டிய ஒரு சமூக பார்வை அவர்களிடம் இருக்கிறது.

அப்படி ஒட்டுமொத்த இந்தியர்கள், உலகத் தொழிலதிபர்கள் என அனைவரும் கொண்டாடும் ஒரு மாமனிதர் ரத்தன் டாட்டா மறைந்தார் என்ற செய்தி கோடிக்கணக்கானோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

10 வயதில் தாய் தந்தையை பிரிந்து, பிடித்த படிப்பை படிக்க முடியாமல், காதலிலும் தோல்வியை தழுவி, வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்து கொள்ளாமல் தி மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் ஆஃப் இந்தியா என்ற டைட்டிலுடன் வாழ்ந்த ரத்தன் டாடா, டாட்டா சாம்ராஜ்யத்தை உலகம் முழுவதும் விஸ்தரித்த கதை ஆச்சரியங்கள் நிறைந்தது.

1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி சூரத்தில் பிறந்தார் ரத்தன் டாடா, ஆனால் அவருடைய இளமை காலம் கொடுமைகள் நிறைந்ததாக இருந்தது. ஜம்ஷத் டாடா மகனான ரத்தன்ஜி டாட்டாவின்  வளர்ப்பு மகனான நாவல் டாடாவிற்கும், சோனு டாட்டாவிற்கும் மகளாக பிறந்தார் ரத்தன் டாட்டா. 

நாவல் டாடாவிற்கும் சோனு டாடாவிற்கும் கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவியது, அதன் காரணமாக இருவரும் சண்டை போடாத நாளில்லை. இதை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்த ரத்தம் தாத்தாவின் மனம் வேதனை அடைந்தது. தன் தாய் தந்தையை சமாதானம் செய்ய, சிறுவனாக சில முயற்சிகளை மேற்கொண்டார் அவர் ஆனால் அது எதுவுமே பலன் அளிக்கவில்லை. சரியாக ரத்தம் டாட்டா பத்து வயதை எட்டிய போது, பெற்றோர்கள் பிரிந்து சென்றனர். இது பாசத்திற்காக ஏங்கிய ரத்தம் தாத்தாவிற்கு, மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதை புரிந்து கொண்ட அவருடைய பாட்டி நவாஜ் பாய் டாட்டா, ரத்தம் தாத்தாவை இருக அணைத்துக்கொண்டார். 

ரத்தம் தாத்தாவின் உலகமே அவருடைய பாட்டி தான் என்று சொல்லலாம். தாய் சோனு டாட்டா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் பள்ளிகளில் கேலிகளையும் கிண்டல்களையும் சந்தித்தார் ரத்தன் டாடா. பலமுறை சண்டை போட தோன்றும், ஆனால் அமைதியாக ஒழுக்கமாக இருப்பதை சிறந்தது என்று பாட்டி சொன்னதை ஏற்றுக் கொண்டார் ரத்தம், அது அவருடைய வாழ்நாள் முழுவதுமே பிரதிபலித்தது என்று சொல்லலாம். 


மும்பை மற்றும் சிம்லாவில் பள்ளி படிப்பை முடித்த ரத்தம் டாடா, ஆர்க்கிடெக்சரில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். குடும்பத் தொழிலில் பெரிதும் ஆர்வம் இல்லாத அவர், கட்டடத் தொழில் பயில நினைத்தார். 

ஆனால் அதற்கு குறுக்கே நின்றார் அவருடைய தந்தை நாவல் டாடா. நாவல் டாடாவோ வருங்காலத்தில் குடும்பத் தொழிலை ரத்தன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதனால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை படிக்குமார் நிர்பந்தித்தார். இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமல்லாமல், பல சந்தர்ப்பங்களில் டாட்டாவின் விருப்பத்திற்கு எதிராகவே இருந்துள்ளார் அவரின் தந்தை நாவல் டாடா. வாழ்நாள் முழுவதுமே இந்த உரசல்கள் நீடித்தது. 

இதனால் வேறு வழியின்றி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க அமெரிக்கா சென்றார் ரத்தம் டாட்டா. ஆனால் தன்னுடைய துறை இது இல்லை என உறுதியாக நம்பிய ரத்தன் டாட்டா, இனியும் இதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று தன்னுடைய பாட்டியின் உதவியை நாடினார். பேரனுக்கு பிடித்த கட்டிடக்கலை பயில ஏற்பாடு செய்தார் ஜம்சர் பாய் டாட்டா. 

கார்னல் பல்கலைக்கழகத்தில் ஆர்க்கிடெக்ட்டில் பட்டம் பெற்ற ரத்தன், அடுத்ததாக ஹார்பர் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை துறையிலும் மேற்படிப்பை முடித்தார். முதல் வேலை ஐபிஎம் நிறுவனத்தில் கிடைக்கிறது, ஆனால் அதே நேரத்தில் டாடா குழுமம் கடுமையான நெருக்கடிகளை சந்திக்கிறது. உடனே இந்தியா வருமாறு அழைக்கிறார் அப்போதைய டாட்டா குழுமத்தின் தலைவர் ஜே ஆர் டி டாட்டா. இன்னொரு பக்கம் தன்னுடைய பாட்டியின் உடல்நிலையும் சரியாக இல்லை என்பதால் இந்தியா திரும்புகிறார் ரத்தம் டாட்டா. 

அங்கு தான் ரத்தம் டாட்டாவின் முதல் காதல் முடிவுக்கு வருகிறது. லாஸ் ஏஞ்சல்சில் இருக்கும்போது ஒரு பெண்ணை காதலித்து வந்த ரத்தம் டாடா அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஆனால் இந்தியாவில் 1962 களில் சீனாவுடன் நிலவி வந்த போர் பதற்ற சூழலால், காதலியின் பெற்றோர் அவர் இந்தியா செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் இந்தியா வந்துவிட்டு தன்னுடைய காதலியின் வருகைக்காக காத்திருந்தார் ரத்தம் டாட்டா மனம் நொறுக்கி போனார். வாழ்வில் ஒரு பெண்ணின் மீது அவருடைய முதல் மற்றும் கடைசி காதல் இதுதான், இதன்பின் வாழ்நாள் முழுவதும் அவர் திருமணமே செய்து கொள்ள வில்லை.


இந்தியா திரும்பிய அவர் பாட்டியை பார்த்துக் கொள்வதில் தன்னுடைய முழு நேரத்தையும் செலுத்தினார், அப்போதுதான் டாடா குழுமத்தில் நிலவும் குழப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் டாட்டாவிற்கு புரிய வருகிறது. இதனால் டாட்டா நிறுவனத்தின் பாரம்பரியத்தை காக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதை உணரும் ரத்தம் டாட்டா, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஆறு மாத அப்ரண்டீஸ் ஆக இணைந்தார். அதன்பின் டாட்டா ஸ்டீல் தொழிற்சாலையிலும் கடைநிலை ஊழியராக பணிபுரிந்தார் ரத்தன். 

டாட்டா குடும்பத்தில் மகனாக இருந்தாலும், சலுகைகள் எதையுமே எதிர்பார்க்காத ரத்தம் டாட்டா ஒரு விஷயத்தை உறுதியாக நம்பினார். கடைநிலை ஊழியனாக இருந்து ஸ்கிராட்சில் இருந்து ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டால் மட்டுமே, நுணுக்கங்களை அறிந்து அத்தொழில் வெற்றி பெற முடியும் என்பது ரத்தம் டாட்டாவின் தீர்க்கமான நம்பிக்கை. 

அதனால் காலையில் பெல் அடிக்கும் போது வேலைக்கு சென்றவர், வேர்வை சிந்தி சக ஊழியர்களை போன்று தொழிற்சாலையில் வேலை பார்த்தார். இதுவே பின்னாளில் டாடா நிறுவனத்தை ரத்தம் நிர்வகிக்க அஸ்திவாரம் போட்டது. 

இந்திய அரசு கொண்டு வந்த தொழில்துறை கட்டுப்பாடுகள், டாடா நிறுவனத்தை அசைத்துப் பார்த்தது. அதே நேரத்தில் டாட்டா நிறுவனத்திற்கு உள்ளும் ஜே ஆர் டி டாட்டாவை தலைமை பொறுப்பிலிருந்து தூக்குவதற்கான நடவடிக்கைகளில் அவருக்கு எதிராக சிலர் செயல்பட்டு வந்தன. அப்போது ஜி ஆர் டி டாட்டாவின் சாய்ஸ் ரத்தன் டாடாவாக இருந்தார். 

இளமையும் துடிப்பும் நிறைந்த ரத்தம் தாத்தாவிடம் நெல்கோ நிறுவனத்தை ஒப்படைத்து முதல் அசைன்மென்ட் வழங்குகிறார் ஜி ஆர் டி டாட்டா. ஆரம்பத்தில் சில சருக்கல்களை சந்திக்கும் அவர், நவீன வளர்ச்சியை தனக்கு சாதகமாக்கும் வகையில் சேட்டிலைட் சேவையை வழங்க தொடங்குகிறார். இது அகல பாதாளத்தில் இருந்த நில்கோ நிறுவனத்தை, லாபகரமான நிறுவனமாக மாற்றுகிறது. அடுத்தடுத்த பொறுப்புகள் ரத்தம் டாட்டாவை தேடி வந்தது, அவை அனைத்துளுமே சிக்ஸர் அடித்தார் ரத்தன் டாட்டா. 

இதனால் சிறு பொடியனாக ரத்தம் காட்டாவை பார்த்தவர்கள் மத்தியில், டாடா நிறுவனத்தின் வருங்காலம் ரத்தம் தான் என்னும் நம்பிக்கை உருவாக்கினார் அவர். இதனால் ரத்தம் தாத்தா டாட்டா குழுமத்தின் தலைவராக ஜி ஆர் டி டாட்டா பரிந்துரைத்த போது அதை யாராலும் மறுக்க முடியவில்லை. 

1991 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் தலைவராக பொறுப்பேற்றார் ரத்தம் டாட்டா. அரசின் புதிய அறிவிப்புகளால் இந்தியா உலகமயமாக்கல் கொள்கையை நோக்கி நகரத் தொடங்கியது, பாரின் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்தால் நாம் நசுக்கப்படுவோமே என்று பல நிறுவனங்கள் அஞ்சின. ஆனால் இடையே பாசிட்டிவாக யோசித்த ரத்தன் டாட்டா, உலகம் முழுவதும் டாடா ப்ராடக்ட்சை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற மிகப் பெரிய கனவை கண்டார். 

இன்று குடிக்கும் ஜூஸ் தண்ணீர், டீ தொடங்கி, அணியும் வாட்ச் உடை, ஓட்டும் கார் பறக்கும் விமானம், ஐடி நிறுவனம், கெமிக்கல்ஸ், ஸ்டீல் என டாட்டா நிறுவனத்திடம் இல்லாத பொருட்களோ சேவைகளோ இல்லை என்று சொல்லலாம். இது அனைத்திற்கும் அன்றே விதை போட்டவர் ரத்தம் டாட்டா தான். 

தான் பொறுப்பேற்ற போது இருந்ததை விட 70 மடங்கு டாட்டா நிறுவனத்தை விஸ்தரிக்க செய்தார் ரத்தம் டாட்டா. இந்தியர்கள் அனைவரையுமே ஏதோ ஒரு வகையில் டாட்டா நிறுவனம் சென்றடைத்திருக்கும் என்று சொல்லும் அளவிற்கு டாட்டா குழுமம் உயர்ந்தது.

இங்கிருந்து டாட்டாவின் தயாரிப்புகளை சர்வதேச சபைக்கு எடுத்துச் சென்ற ரத்தம், உலகின் சிறந்த விஷயங்களை இந்திய சந்தைக்கு எடுத்து வந்தார். அப்படிதான் சொகுசு காரர்களான லேண்ட்ரோவர், ஜாகுவார் ஆகியவை இந்திய சாலைகளில் ஓட தொடங்கியது. அதே நேரம் சாமானியர்கள் பயன்படுத்த ஒரு லட்சம் ரூபாயில் டாட்டா நானோ காரை அறிமுகப்படுத்திய பெருமையும் ரத்தம் டாடா உண்டு.

தொழில் மீது எப்படி காதல் கொண்டிருந்தாரோ அதேபோன்று தன்னுடைய ஓய்வு நேரங்களில் ரேஸ் மீது மிகப்பெரிய பிரியம் கொண்டவர் ரத்தம் டாட்டா. வேகமாக தன்னுடைய போட்டுகளில் பயணிப்பது, செட் விமானங்களில் பறப்பது, ஆளில்லாத ரோடுகளில் கார்களில் சீறிப்பாய்வது ரத்தம் தாத்தாவின் பொழுதுபோக்கு. 

ஒரு முறை ரத்தம் டாடாவிடம் உங்கள் மறைவுக்குப் பிறகு, மக்கள் மனதில் நீங்கள் எவ்வாறு இருக்க உணர்கிறீர்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு யாரையும் வாழ்நாளில் காயப்படுத்தாமல் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு நபராக அறிய விரும்புகிறேன் என்று என்று தெரிவித்தார். 

சொன்னது போன்றே நிஜ வாழ்விலும், பணக்காரர்கள் பட்டியலில் தன்னுடைய பெயர் இருப்பதை என்றும் விரும்பாத ரத்தன் டாட்டா. நன்கொடை வழங்கும் பட்டியலில் முதலில் இடத்தில் இருப்பதை உறுதி செய்தார். கொரோனா காலத்தில் இந்திய அரசுக்கு 1500 கோடி ரூபாய் டாட்டா குழுமம் சார்பில் வழங்கப்பட்டது. அதேபோன்று தமிழ்நாட்டிற்கும் 8 கோடி மதிப்பிலான பிசி ஆர் கருவிகளை வழங்கினார் ரத்தன் டாட்டா. 

இப்படி தொழில் சமூகம் என்று அனைத்திலும் கூலோச்சி,  இந்தியர்களே மனங்களை வென்ற ரத்தம் டாட்டா, சக போட்டியாளர்களான தொழில் அதிபர்களின் மதிப்பையும் பாராட்டையும் வென்றவர். இன்று ரத்தம் டாடா மறைந்தாலும், அவருடைய நினைவுகள் இந்திய வரலாற்றில் இருந்து மறக்க முடியாதவை.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram