துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி ராதாகிருஷணன் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடுவார் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் குடியரசு துணைத்தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா செய்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த குடியரசு துணைத்தலைவர் யார் என்ற கேள்வி எழத் தொடங்கியது. இந்நிலையில் இந்த ரேஸில் பாஜகவின் மூத்த தலைவர்கள் முதல் காங்கிரஸை சேர்ந்த ஒருவர் வரை இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.
தேர்தல் ஆணையம் குடியரசு துணைத்தலைவர் தேர்தலை அறிவித்ததிலிருந்து, துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் குறித்து பாஜக மற்றும் பாஜக தனது வேட்பாளரின் பெயரை இறுதி செய்ய கடந்த சில நாட்களாக மும்முரமாக ஈடுப்பட்டு வந்தது. இதற்காக பாஜக வேட்பாளர்களில் டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா மற்றும் பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆகியோரின் பெயர்கள் பரிசிலனையில் இருந்து
குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத், கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட், சிக்கிம் ஆளுநர் ஓம் மாத்தூர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, மகாராஷ்டிர ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோரும் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என்று பேச்சுகள் அடிப்பட்டது.
இந்த நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி ராதாகிருஷணன் போட்டியிடுவார் என பாஜக தலைவர் ஜே.பி நட்டா அறிவித்துள்ளார்.தேர்வு செய்யப்பட்டுள்ள சிபி ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த சிபி ராதகிருஷ்ணன் 1998 ஆம் ஆண்டு கோவை மக்களவை தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் 2003-2006 ஆண்டு தமிழக பாஜக தலைவராகவும் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும் பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.