Cow vigilantes beats Muslim man | பசு காவலர்களால் இஸ்லாமியர் கொலை? குஜராத்தில் கொடூரம்
பசு காவலர்களால் இஸ்லாமியர் கொலை..
குஜராத்தில் கொடூரம்!
தங்கைக்கு மாடு வாங்கிக்கொண்டு வந்த அண்ணனை, பசு காவலர்கள் இரும்பி கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மிஷ்ரி கான் ஜுமே கான் பலோச். 4 குழந்தைகள், பார்வை குறைப்பாடு உள்ள மனைவியை கொண்டுள்ள பலோச் அண்மையில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பசு காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி தான் தற்போது நாட்டையே உலுக்கியுள்ளது.
சம்பவம் நடந்த மே 23ம் தேதி பலோச் மற்றும் அவரது நண்பர் ஹுசைன் கான் ஆகியோர் லொக்கல் மார்க்கெட்டிற்கு சென்று 2 எருமை மாடுகளை வாங்கியுள்ளனர். லோடு வாகனத்தில் வாங்கிய மாடுகளை ஏற்றிக்கொண்டு, தன்னுடைய தங்கைக்கு கொடுப்பதற்காக பலோச் வந்துள்ளார்.
அப்போது அவரின் வாகனத்தை இடைமறித்து தடுத்த, பசு காவலர்கள் சிலர் பலோச்சை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனை கண்ட அவரின் நண்பர் ஹுசைன் கான், அங்கேயே வாகனத்தை விட்டுவிட்டு தப்பித்து ஓடியுள்ளார். ஒரு கட்டத்தில் இரும்பு கம்பியை கொண்டு அந்த கும்பல் தாக்கியதில் பலோச் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
தங்கைக்கு மாடு வாங்கிக்கொண்டு கொடுக்க வந்த அண்ணனை, தவறாக இறைச்சிக்காக மாடுகளை எடுத்து செல்வதாக புரிந்துகொண்டு பசு காவலர்கள் தாக்கியதில், அவர் உயிரிழந்த சம்பத்தால் அங்கே இஸ்லாமியர்கள் மற்றும் மாற்று சமூகத்தினர் மத்தியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் காவல்துறை சார்பில் உண்மைக்கு மாறாக முன்பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் சில இடங்களில் மாடுகளை கொண்டு செல்வோரை வழிமறித்து பணத்தை பிடுங்குவதும், அவர்களை தாக்குவதும் ஆகிய சம்பவங்கள் அரங்கேருவதாகவும், ஆனால் உச்சநீதிமன்றம் ஏற்கனவே எச்சரித்தும் காவல்துறை வழக்குகளை திரித்து, விபத்து நடந்தது போல் பதிவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் மாடுகளை எடுத்துச்சென்றார், மேலும் அவர் இஸ்லாமியர் என்பதால் தான் அவர் அடித்து கொள்ளப்பட்டார் என பலோச்சின் உறவினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இன்னோரு பக்கம் பலோச்சையே நம்பியிருந்த அவரின் 4 குழந்தை மற்றும் பார்வை குறைபாடு உள்ள மனைவி ஆகியோர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் மாநிலத்திலேயே இப்படிபட்ட கொடூரம் நடக்கிறதா என பலர் ஆதங்கபட்டு வரும் நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.