ABP News

Sexual Harassment | பெண்ணுக்கு பாலியல் தொல்லை இரவில் நடுரோட்டில் கொடூரம் CCTV வீடியோவில் அதிர்ச்சி | Bangalore

Continues below advertisement

பெங்களூருர் குடியிருப்பு பகுதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

சாலையில் தனது தோழியுடன் நடந்து சென்ற ஒரு பெண்ணை பின்தொடர்ந்து வந்த நபர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள BTM layout பகுதியில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் முழுமையாக பதிவாகி இருந்ததால், பெண்ணுக்கு நேர்ந்த அவலம் அம்பலமாகியுள்ளது.

வீடியோவில், “வீடுகள் நிறைந்த ஒரு பகுதியில் உள்ள குறுகிய சாலையில் இரண்டு பெண்கள் நடந்து செல்கின்றனர். அடையாளம் தெரியாத இளைஞர் தங்களை பின் தொடர்ந்து வருவதை   கண்டு அவர்கள் வேகமாக நடப்பது போல் தெரிகிறது. அப்போது திடீரென அந்த நபர் ஒரு பெண்ணை இழுத்து, அவரிடம் தகாத முறையில் நடந்துள்ளார். உடனிருந்த பெண் கத்தி கூச்சலிட்டு தனது தோழியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், தெருவில் சம்பவத்தின் போது அந்த மூன்று பேரை தவிர வேறு யாரும் இல்லாததால், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சில நொடிகளில் நடந்த இந்த சம்பவத்தில் அதிர்ச்சியில் உறைந்த அந்த பெண்கள், பின்பு மெல்ல சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து செல்வது” தொடர்பான காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. கடந்த நான்காம் தேதி நள்ளிரவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன் முன்வரவில்லை என்றால், முறையான புகாரைப் பதிவு செய்வதில் தாங்களாகவே நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கூறியிருந்தது. இதுதொடர்பாக விசாரணைகள் நடந்து வருகின்றன.

வீடுகள் நிறைந்த பகுதியில் சாலையிலேயே இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால், பெங்களூரு மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறி வருகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola