Kerala News : ”பெட்ரோலுக்கு பணம் கொடுங்க” காரை ஏற்றி கொலை முயற்சி பகீர் CCTV காட்சி
கேரளாவில் பெட்ரோலுக்கு பணம் கேட்ட பங்க் ஊழியர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நேற்று சந்தோஷ் குமார் என்பவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அப்போது பங்க் ஊழியர் அனில் காருக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். இதையடுத்து சந்தோஷ்குமார் பெட்ரோலுக்கான முழு தொகையை கொடுக்காமல் அங்கிருந்து காரை எடுத்து கொண்டு செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பங்க் ஊழியர் அனில் காரை வழிமறிக்க முயன்றுள்ளார்.
ஆனால் சந்தோஷ்குமார் காரை முன்னே நின்ற பங்க் ஊழியர் மீது ஏற்றிய நிலையில் அவர் காரின் முன்பகுதியில் தொங்கியபடி சிறிது தூரம் காரை ஓட்டி சென்றுள்ளார். இதில் காரின் முன்பக்கம் சிக்கிக்கொண்ட பங்கு ஊழியர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பங்க் ஊழியர் அனில் அளித்த புகாரின் பேரில் காரை ஓட்டிய காவல்துறை சேர்ந்த சந்தோஷ் குமார் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பங்க் ஊழியர் மீது ஓட்டுநர் காரை ஏற்றி செல்லும் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.