Arunachal Pradesh Assembly | அருணாச்சலில் மீண்டும் பாஜக! ஷாக்கில் எதிர்க்கட்சிகள்! முன்னிலை நிலவரம்

Continues below advertisement

அருணாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், முன்னிலை வகிக்கும் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. அதில் 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வான நிலையில் 50 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடந்து வரும் நிலையில், பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

11 மணி நிலவரப்படி, பாஜக 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 31 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தேசிய மக்கள் கட்சி 6 இடங்களிலும்,  அருணாச்சல மக்கள் கட்சி 2 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. மேலும் சுயேட்சை வேட்பாளர் வங்ளாம் சவின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 2019 சட்டசபை தேர்தலில் 41 இடங்களை கைப்பற்றிய பாஜக பெமா கந்து தலைமையில் ஆட்சி அமைத்தது. 60 தொகுதிகள் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 31 இடங்களை கைப்பற்ற வேண்டும். இந்தநிலையில் ஏற்கனவே 10 தொகுதிகளில் போட்டியின்றி வென்ற பாஜக 21 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலை உள்ளது. ஆனால் 15 தொகுதிகளில் வெற்றியும், 31 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram