Anant Ambani Wedding : பல கோடியில் பரிசு.. திணறடித்த விருந்தினர்கள்! மிரண்டு போன அம்பானி

Continues below advertisement

அடேங்கப்பா இவ்வளவு பரிசு பொருட்களா என்று வியக்கும் வகையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் தம்பதிக்கு திருமண விழாவில் கொடுக்கப்பட்ட திருமண பரிசுகள் பற்றிய  சுவரஸ்ய  தகவல்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா சுமார் 5000 கோடி  ரூபாய் மதிப்பில் நடத்தி முடிக்கப்பட்டது. இவர்களது திருமணம் மற்றும் வரவேற்புக்கு  உலகம் முழுவதிலும் இருந்து பல முக்கிய பிரபலங்கள் தவறாமல் கலந்து கொண்டனர். 

மேலும் இவர்களுக்கு திருமண பரிசாக முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி சார்பாக விலையுயர்ந்த கார், நூறு கோடி ரூபாய் வைரம் மற்றும் முத்துக்கள் அடங்கிய நகைகள் பரிசளிக்கப்பட்டது. மேலும்  பால்ம் ஜுமைராவில் சுமார் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சொகுசு மாளிகையை பரிசாக வழங்கினர். இந்த மாளிகையில் 10 பெரிய படுக்கையறைகளும் ஒரு தனியார் கடற்கரையும் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் 640 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல திருமணத்திற்கு வந்திருந்த பல முக்கிய பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள்  ஆடம்பர பரிசுகளை வழங்கியுள்ளனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் ஃபிரான்ஸில் உள்ள பிளாட்டை பரிசாக வழங்கியுள்ளார். அதேபோல், 16 கோடி ரூபாய் மதிப்பிலான புது வகை ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசாக வழங்கியுள்ளார் சல்மான் கான். இவர்களை தொடர்ந்து, 20 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராயல்ஸை ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி பரிசாக வழங்கியுள்ளனர்.

இதேபோல், ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதியினர் 9 கோடி மதிப்பிலான மெர்சிடஸ் காரையும் . பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க பேனாவை திருமண பரிசாக வழங்கியுள்ளார். 

இவர்கள் மட்டுமில்லாமல் உலகப்பணக்காரர்கள் தொடங்கி பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் வரை முக்கிய பிரபலங்கள் ஆனந்த அம்பானி - ராதிக்கு தம்பதிக்கு பரிசுகளை வாரி வழங்கியுள்ளனர்.

ஃபேஸ்புக் தலைமை நிலைய அதிகாரியான  மார்க் சக்கர்பர்க் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஜெட் விமானத்தை வழங்கியுள்ளார். அதே போல் wwf மூலம் பிரபலமான ஜான் சீனா 3 கோடி மதிப்புள்ள லம்பொகிர்னி என்னும் சொகுசு காரையும், 180 கோடியில் தனியார் சொகுசு கப்பலை பில்கேட்ஸும், 100 கோடி ரூபாயில் ஹெலிகாப்டரை சுந்தர் பிச்சையும் பரிசாக வழங்கியுள்ளனர். 
மேலும் தெனிந்திய நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மகேஷ் பாபு திருமண நிகழ்வில் பங்கேற்ற பல விருந்தினர்கள் விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை ஆனந்த் அம்பானி ராதிகா தம்பதிக்கு பரிசாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram