Roja Scam in Aadudam Andhra : ’’100 கோடி மோசடி’’ரோஜா மீது புகார்!ஆந்திராவில் பரபரப்பு

Continues below advertisement

நடிகை ரோஜா, சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த போது ஆடுதாம் ஆந்திரா என்ற நிகழ்ச்சிக்காக ஒதுக்கிய ரூ 100 கோடி நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது..இதுதொடர்பாக ரோஜாவிடம்  சிபிஐ விசாரணை  விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது..

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் நடிகை ரோஜா செல்வமணி. இவருக்கு கடைசி இரண்டரை ஆண்டுகள் சுற்றுலா, விளையாட்டு, இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. 

இவர் 3 ஆவது முறையாக நகரி தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சி இருந்த போது ஆடுதாம் ஆந்திரா எனும் நிகழ்ச்சி ஆந்திரா முழுவதும் நடத்தப்பட்டது.தோல்வி முயற்சியாக கருதப்பட்ட இந்த நிகழ்ச்சிக்காக   ரூ 100 கோடியை ஜெகன்மோகன் அரசு ஒதுக்கியதாக அறிவித்திருந்தது.

 

இந்த பணத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று ஆத்யா- பாத்யா அமைப்பினர் விஜயவாடா சிஐடி அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ரோஜாவிடம் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram