Ajit Pawar Plane Crash : விழுந்து நொறுங்கிய அஜித் பவார் விமானம்! பகீர் காட்சிகள்!

மஹாராஸ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற தனி விமானம் பாராமதி பகுதியில் விபத்துக்குள்ளானதில் சுக்குநூறாக நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித் பவார் உட்பட அந்த விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஸ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் சென்ற சிறிய ரக தனி விமானம் பாராமதி பகுதியில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே விமானம் விழுந்து நொறுங்கியது. முதற்கட்டமாக விமானத்தில் பயணித்த அஜித் பவார் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் விமானம் விழுந்த இடத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அஜித் பவார் உட்பட அந்த விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழந்துவிட்டதாக டிஜிசிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த விபத்து குறித்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஸ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற தனி விமானம் பாராமதி பகுதியில் விபத்துக்குள்ளானதில் சுக்குநூறாக நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித் பவார் உட்பட அந்த விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola