Actor Siddharth Apology: பிரச்னைய முடிச்சுக்கலாம்.. சாய்னாவிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த்

Actor Siddharth Apology: சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த் "அன்புள்ள சாய்னா, நான் ட்வீட் செய்த நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்களிடமிருந்து பல்வேறு கருத்துகளிலும் வேறுபட்டிருக்கலாம். உங்கள் ட்வீட்டைப் படித்தபோது எனக்கு கோபமும், ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக எனது வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது. நான் இதைவிட இரக்கம் கொண்டவனே. நான் நகைச்சுவை என்று கருதி அந்த ட்வீட்டைப் பதிவிட்டிருந்தாலுமே, அது நல்ல நகைச்சுவை அல்ல. சரியான கருத்தைக் கொண்டு சேர்க்காத அந்த நகைச்சுவைக்காக வருந்துகிறேன். அதேவேளையில் நான் வார்த்தை விளையாட்டாக பதிந்த அந்த நகைச்சுவை, என்னைச் சாடுவோர் கூறுவதுபோல் இழிவான நோக்கம் கொண்டது அல்ல. நான் உண்மையிலேயே ஒரு திடமான பெண்ணியவாதி. ஒரு பெண் என்பதால் உங்களை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த ட்வீட்டை நான் பதிவு செய்யவில்லை. இந்தப் பிரச்சினையை நாம் முடித்துக் கொண்டு முன்னேறலாம் என நினைக்கிறேன். நீங்கள் எனது மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்போதுமே எனது சாம்பியன் தான். நேர்மையுடன் சித்தார்த்!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola