”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சை

Continues below advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் நுழைந்த இளையராஜாவை ஜீயர்கள் தடுத்து நிறுத்தி கருவறைக்கு வெளியில் நிற்கச் சொன்னதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தனியார் நிறுவனம் சார்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இசையமைப்பாளர் இளையராஜா வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து தரிசனம் செய்வதற்காக செய்ய கோயில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்துக்குள் நுழைந்தார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை கருவறைக்குள் வெளியே நிற்குமாறு கூறினார்கள். இதனால் செய்கை தெரியாது திகைத்த இளையராஜா பின்னர் அங்கிருந்து வெளியேறி அர்த்த மண்டக படியின் அருகே நின்றபடி கோயில் நிர்வாகம் அளித்த மரியாதை ஏற்றார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

மற்றொரு பக்கம் இளையராஜாவுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக ஜீயர்கள் முறையிட்டு உள்ளனர். கடவுள்களைத் தவிர மனிதர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் எந்த ஒரு மரியாதையும் அளித்து அழைத்து வரக்கூடாது என்று விதி உள்ளதாகவும், இளையராஜா மற்றும் உடன் இருந்த ஜீயர்களுக்கு வெண்கொடை பிடித்து மேள தாளங்கள் முழங்க கோவில் யானை வரவேற்பு அளித்து பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram