Hyundai Ayudha Pooja Celebration : ரோபோ ஐயர்!விமானத்தில் இறங்கிய சரஸ்வதி! ஹூண்டாய் நிறுவனம் அசத்தல்
ஹுண்டாய் தொழிற்சாலை தொழிலாளர்லள் தொழிற்சாலை வேஸ்ட் பொருள்களில் இருந்து சிறிய விமானத்தில் சரஸ்வதி இறங்குவது, ரோபோடிக் இயந்திரத்திற்கு ஐயர் வேடம் அணிவித்து பூஜை செய்வது போன்று நூதன முறையில் ஆயுத பூஜை கொண்டாடிய நிகழ்வு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் கார் உற்பத்தி செய்யும் ஹூண்டாய் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
இங்கு வருடந்தோறும் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் (வேஸ்ட்) பொருள்களை வைத்து கடவுள் சிற்பங்களை உருவாக்கி அவற்றை வைத்தே ஆயுத பூஜை கொண்டாடுவர் அதேபோல இந்தாண்டும் ஹூண்டாய் தொழிற்சாலையில் உள்ள பொறியியல் துறை, பெயின்ட் ஷாப், அசம்ப்ளி ஷாப், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது துறையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்களை வைத்து கடவுள் சிற்பங்கள், தஞ்சை பெருவுடையார் கோயில், விநாயகர் சிலை, துர்கை அம்மன் ஆகிய வடிவங்களை உருவாக்கி அந்தந்த துறை வளாகத்தில் வைத்து ஆயுத பூஜை கொண்டாடினர்.
ரோபோடிக் இயந்திரத்தை வைத்து ஐயர் உடைய அணிந்து பூஜை செய்து சிறிய ரக விமானத்தில் சரஸ்வதி சுவாமியை வரவைத்து காரில் இருந்து தானியங்கி மூலமாக அம்மன் காட்சியளிப்பது போன்ற பிரம்மிக்க வைக்கும் விதமாக ஆயுத பூஜை கொண்டாடினர்
இந்த பூஜையில், தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் உன்சூ கிம், உற்பத்தி முதன்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன்உள்ளிட்டத் தொழிற்சாலையின் முதுநிலை அதிகாரிகள், தொழிலாளர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்