கடனை திருப்பி கேட்ட காதலி.. குடும்பத்தை தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலன்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்துள்ள கே.ஜி வலசு பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர். இவரது மகள் தீபா, தனது கணவர் பிரபு மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் தந்தையின் தோட்டத்தில் உள்ள வரவு செலவு கணக்குகளையும் பார்த்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பால் வியாபாரி கல்யாணசுந்தரம் தனது கால்நடைகளுக்கான தீவனங்களை தொடர்ச்சியாக தீபாவின் தோட்டத்தில் இருந்து அறுவடைசெய்து, அதற்கான பணத்தையும் கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக தீபாவுக்கும் அவரது தந்தை கருப்பண்ண கவுண்டருக்கும் கல்யாண சுந்தரம் நெருங்கிய நண்பராக மாறிப்போனார். பின்னர் கல்யாண சுந்தரம் தீபாவிடம் 10 சதவீத வட்டியில் கடன் வாங்கி, வட்டியுடன் கட்டி வந்துள்ளார். அப்படி 7 முதல் 8 லட்சம் வரையில் கடனாக பெற்றுள்ளார். மேலும் தீபாவின் தந்தையுடன் சேர்ந்து அவர்களது விவசாய பூமியையும் அருகே உள்ள விவசாய நிலங்களையும் கல்யாண சுந்தரம் குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வந்துள்ளார். கொரோனா மாத்திரை எனச்சொல்லி பூச்சிக்கொல்லி மாத்திரைகள் : மூவர் கொலையில் அதிர்ச்சிப் பின்னணி என்ன? இதனிடையே தீபாவுக்கும் கல்யாணசுந்தரத்துக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே தீபாவை அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தொட்டுப் பேசுவதை பார்த்துள்ளார். இதுதொடர்பாக கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கல்யாண சுந்தரத்திடம் இருந்து விலகத்தொடங்கிய தீபா, கடனை வட்டியுடன் 15 இலட்ச ரூபாய் தர வேண்டுமென கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கல்யாணசுந்தரம் 15 இலட்ச ரூபாய் கடனை கட்டுவதற்கு பதிலாக தீபாவின் குடும்பத்தையே தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார். கொரோனா மாத்திரை எனச்சொல்லி பூச்சிக்கொல்லி மாத்திரைகள் : மூவர் கொலையில் அதிர்ச்சிப் பின்னணி என்ன? அதன்படி அப்பகுதியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் சபரி என்ற மாணவரிடம், பஞ்சாயத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கல்யாணசுந்தரம் கொலைத் திட்டத்திற்கு பயன்படுத்தியுள்ளார். பூச்சி கொல்லி மாத்திரையான சல்ப்பாஸ் மாத்திரையை காப்பி தூளில் போட்டு, நிறத்தையும், மணத்தையும் மாற்றி சபரியிடம் கொடுத்துள்ளார். மேலும் கருப்பண்ண கவுண்டர், மல்லிகா, தீபா, பிரபு ஆகிய நான்கு பேரின் பெயரை ஒரு பேப்பரில் எழுதி, தான் சொல்லும் வீட்டிற்கு சென்று கொரோனோ பரிசோதனை செய்ய வந்துள்ளதாக கூறி மாத்திரையை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அதன்படி கல்யாணசுந்தரம் அவர்களது வீட்டில் இருந்தபோது, சபரி கொரோனா பரிசோதனை செய்ய வந்துள்ளதாக அனைவரிடமும் கூறியுள்ளார். தான் கொண்டு வந்திருந்த மாத்திரையை வெந்நீரில் கருப்பண்ண கவுண்டர், மல்லிகா, தீபா மற்றும் வேலையாள் குப்பம்மாள் ஆகியோர் சாப்பிட்டதும், வெப்பமாணியை கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்து கொரோனா இல்லை என சபரி கூறியுள்ளார். உஷாராக மாத்திரையை சாப்பிடாத கல்யாணசுந்தரம் அங்கியிருந்து சபரியுடன் வெளியேறியுள்ளார். சில மணிநேரத்தில் கருப்பண்ண கவுண்டர், மல்லிகா, தீபா, குப்பம்மாள் ஆகியோருக்கு மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீபாவின் கணவர் பிரபு அளித்த தகவலின் பேரில், எதுவும் தெரியாதது போல அங்கு வந்த கல்யாணசுந்தரம், உடல்நிலை மோசமான நிலையில் கிடந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, மல்லிகா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கருப்பண்ண கவுண்டர், தீபா ஆகியோர் கோவை தனியார் மருத்துவனையிலும், குப்பம்மாள் சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். யார் என அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து சத்து மாத்திரையை கொடுத்ததாகவும், அதனை உட்கொண்டதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கல்யாணசுந்தரம் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். கொரோனா மாத்திரை எனச்சொல்லி பூச்சிக்கொல்லி மாத்திரைகள் : மூவர் கொலையில் அதிர்ச்சிப் பின்னணி என்ன? மல்லிகா உயிரிழந்ததுடன், பூச்சிகொல்லி மாத்திரையை சாப்பிட்ட தீபா மற்றும் குப்பம்மாள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, கல்யாணசுந்தரம், சபரியை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கல்யாணசுந்தரம் கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவினாசி அருகே தலைமறைவாக இருந்த சபரியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். கல்யாணசுந்தரம் மற்றும் சபரி மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.