Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

Continues below advertisement

சிவபெருமான் மீது அதிக பற்று கொண்ட சாமியார் ஒருவர் 12 ஆண்டுகளாக உட்காரவோ, படுக்கவோ செய்யாமல் நின்று கொண்டே இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தவத்தின் முடிவில் சிவனின் அருள் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

ஹரியானாவை சேர்ந்த துலால் கிரி ஜி மகாராஜ் என்ற சாமியார் சிவபெருமான் மீது கொண்ட அதீத பக்தி காரணமாக கடா தபஸ்யா என்ற நின்றுகொண்டே செய்யும் கடுமையான தவத்தை கடைபிடிக்கிறார். உட்காரவோ, படுக்கவோ செய்யாமல் நின்று கொண்டே இருப்பதுதான் இந்த விரதம். அவர் 12 ஆண்டுகளாக இப்படி நின்றிருப்பதாக சொல்கின்றனர். 

சாமியார் ஓய்வெடுப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கயிறு வைத்து கட்டப்பட்ட மரப்பலகை ஒன்றில் அவர் தனது மார்பையும் கைகளையும் சாய்ந்து தூங்குகிறார். ஆனால் எப்போதும் அவரது கால்கள் நின்ற நிலையிலேயே இருக்கின்றன. இவருக்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை அங்குள்ள கோயில் தன்னார்வலர்களும் பக்தர்களும் கவனித்துக் கொள்கிறார்கள். 

இத்தனை ஆண்டுகளாக நின்று கொண்டே இருப்பதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இவரது கால்கள் வீங்கி இருக்கின்றன. அதோடு ரத்த அழுத்தத்தின் காரணமாகத் தோலின் நிறம் முற்றிலுமாகக் கருத்து, கல் போல் கடினமாக மாறியுள்ளது. தொடர்ந்து இப்படி நிற்பதால் நரம்புகள் சுருண்டு தோலில் புண்கள் ஏற்பட்டு, திசுக்கள் அழுகும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவரது கால்களில் தீவிரமான பாதிப்புகள் ஏற்படாதவாறு பக்தர்கள் கால்களில் மருந்துகளைத் தடவி, இரத்த ஓட்டத்தை சீராக்க மசாஜ் செய்து விடுகிறார்கள்.

12 ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கும் அதிசய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola