குடிக்க காசு வேணும் மின்கம்பியில் தூங்கிய இளைஞர் : Drunken Man Atrocity : Andhra Pradesh

ஆந்திராவில் இளைஞர் ஒருவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தனது தாய் செலவுக்கு பணம் கொடுக்க மறுத்ததால், மதுபோதையில் மின்கம்பத்தில் ஏறி வையர்கள் மீது படுத்து அலப்பறை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுலம் மாவட்டத்தில் உள்ள சிங்கபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் யஜ்ஜலா வெங்கண்ணா. இவர் கடந்த டிசம்பர் 31 அன்று புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார். தாயின் பென்சன் தொகையை மது அருந்த கேட்டதால் அவருக்கு பணம் கொடுக்க தாய் மறுத்துள்ளார். தாஅய் பணம் கொடுக்க மறுத்த கோபத்தில், மதுபோதையில் இருந்த வெங்கண்னா அருகில் உள்ள மின்கம்பம் மீது ஏறி அதன் வயர்கள் மீது படுத்து அலப்பறை செய்துள்ளார்.

வெங்கண்ணாவின் இந்த செயலை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர் மேலே ஏறுவதற்கு முன்னரே அந்த பகுதி மின்சாரத்தை துண்டித்து பெரிய விபத்தை தடுத்துள்ளனர். பின்னர் வெங்கண்ணா விடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கிராம மக்கள் அவரை சமாதனப்படுத்தினர். பின்னர் அவர் மின்கம்பத்தில் இருந்து பத்திரமாக கீழே இறங்கியுள்ளார். 

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தாய் பணம் தர மறுத்ததால் இளைஞர் மின்கம்பத்தில் ஏறி படுத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola