
Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் ஏன் தி.மு.க.வில் இணைந்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் சத்யராஜ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவரது மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து மருத்துவர் ஆவார். இவர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் அவர் இணைந்தபோது அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு உடனிருந்தனர்.
மருத்துவர் திவ்யா கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்தார். அரசியல் மீது ஆர்வம் கொண்ட அவர் ஏதேனும் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார். அவரது தந்தையும், நடிகருமான சத்யராஜ் தீவிர பெரியார் ஆதரவாளர். திராவிட கட்சித் தலைவர்களுடன் அவர் நெருக்கமான உறவு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திவ்யா சத்யராஜ் தற்போது தி.மு.க.வில் இணைந்துள்ளார். தி.மு.க.வில் இணைந்துள்ள அவருக்கு விரைவில் கட்சியில் ஏதேனும் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.