Thoppur Lorry Accident | தொப்பூரில் பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்

Continues below advertisement

தருமபுரி சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் கணவாய் பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நகரப் பேருந்தும் எதிரே வந்த ஈச்சர் லாரியும் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர் மூன்று பேருக்கு பலத்த காயம் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பெங்களூரு சேலம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை தருமபுரி மாவட்டம் தொப்பூர் வனச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இதற்காக பல்வேறு தரப்பினர் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தது அடிப்படையில் 750 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தொப்பூர் வன சாலையில் இருவழி பாதையை  ஒரு வழி பாதையாக மாற்றி வாகனங்களை அனுமதிக்கப்பட்டு அந்த வழியாக சென்று வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை தருமபுரி அரசு நகர பேருந்து தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து தொப்பையார் டேம் வரை செல்லும் பேருந்து திடீரென்று ஆஞ்சநேயர் கோயில் அருகில் செல்லும் பொழுது பேருந்தின் பிரேக் பழுதானதால் எதிரே சேலத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற ஈச்சர்  லாரியின் மீது மோதியது. இதில் லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்களை உடனடியாக சுங்கச்சாவடி ஊழியர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் 13 பேர் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர் இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு பணி நடைபெற்று வருவதால் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் இயக்கப்படுவதால் தினந்தோறும் தொப்பூர் வனப்பகுதி வெள்ளக்கல் பகுதியில் இருந்து இரட்டைப் பாலம் வரை இரண்டு 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram