Dharmapuri Diamond Jubilee Celebration: அவ்வைக்கு நெல்லிக்கனி!அதியமான் வேடத்தில் மாணவர்
தருமபுரி மாவட்டத்தின் வைரவிழா கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், மாண்வர்கள் அதியமான் முகமூடி அணிந்து வந்து அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த நிகழ்வை அரங்கேற்றி காண்போரை ரசிக்க வைத்தனர்.
தருமபுரி மாவட்டம் உதயமாகி 60 ஆண்டுகள் முடிந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் 10 நாட்களுக்கு தலை நிமிரும் தருமபுரி, அகவை 60 வைர விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இன்று அதியமான் கோட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.சதீஸ் தலைமையில் நடைபெற்ற வைர விழாவிற்கு பள்ளி மாணவ, மாணவிகள் அதியமான் முகமூடி அணிந்து கொண்டு ஊர்வலமாக விழா அரங்கிற்கு வந்தனர். அப்பொழுது அவ்வையார், அதியமான் வேடம் அணிந்து கொண்டு, அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுக்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஆர்.சதீஸ் முன்னிலையில் நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எம்பி ஆ.மணி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, மருத்துவ இயக்குனர் மருத்துவர்.எம்.சாந்தி, வருவாய் கோட்டாட்சியர் ஆர்.காயத்ரி சிஇஓ ஜோதி சந்திரா மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.