Dharmapuri baby gender reveal : திருந்தாத Nurse!சுளுக்கெடுத்த அதிகாரி.. குழந்தை பாலின விவகாரம்!

நீங்க எல்லாம் டாக்டர் மேடம்ல அதான் கண்டுப்பிடிச்சு கொடுக்கிறீங்க என்று சட்ட சட்டவிரோதமாக கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பலை  சுகாதாரம் மற்றும் ஊரக நல பணிகள்  இணை இயக்குநர் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியது. 

தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த சீங்கேரி கூட்ரோடு அருகே உள்ள வீட்டில் சட்டவிரோதமாக கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து, பெண் குழந்தையாக இருந்தால் அதை  கருக்கலைப்பு செய்வதாக சுகாதாரம் மற்றும் ஊரக நல பணிகள்  இணை இயக்குநர் டாக்டர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது,

இதையடுத்து  இணை இயக்குநர் டாக்டர் சாந்தி, மருத்வர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்ளிட்ட குழுவிணர் சீங்கேரி கூட்ரோடு பகுதியில் 
தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் சாலையோரம் இருந்த வீட்டில் கர்ப்பிணி பெண்கள் செல்வதை கண்காணித்தவர்கள்  உள்ளே சென்று பார்த்த போது 4 பேர் கொண்ட குழுவினர் கர்ப்பிணிகள்  வயிற்றில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்தது தெரிய வந்தது'

இவர்களை கண்டதும் இருவர் தப்பி ஓடி தலைமறைவாகிய நிலையில் மற்ற இருவரை பிடித்து விசாரித்ததில் தருமபுரி இலக்கியம் பட்டியை சேர்ந்த கற்பகம் வெண்ணாம்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பதும் தப்பியோடியவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த திருமலை ஜோதி என்பதும் தெரிய வந்தது

மேலும் அவர்களிடமிருந்த ஸ்கேன் செய்யும் கருவி, மருந்துகள் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு  இருவரையும், காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மகேந்திர மங்கலம் போலீசார் இருவரையும் கைது செய்து சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவானர்களை தேடி வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட செவிலியர் கற்பகம் ஏற்கெனவே இந்த மாதிரியன வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டு முறை சிறைக்கு சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பலை  சுகாதாரம் மற்றும் ஊரக நல பணிகள்  இணை இயக்குநர் கையும் களவுமாக பிடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola