DMK Cadres Arrest | சிறுமியிடம் அத்துமீறிய திமுக நிர்வாகி!பாய்ந்தது போக்சோ!

அரூரில் திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

தருமபுரி மாவட்டம் அரூரில் 14 வயது சிறுமி தலைவலி காரணமாக அரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது கீழ்மொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சன் மகன் முருகேசன், (59) என்பவர் திமுக அமைப்புசாரா ஓட்டுநர் மாவட்டத் துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இவர் டிராவல்ஸ் மற்றும் பைனான்ஸ் மூலம் கடன் கொடுத்து வசூல் செய்தும் வருகிறார்.

இந்தநிலையில் மருத்துவமனைக்கு சென்ற 14 வயது சிறுமியை முருகேசன், என்பவர் இரவு நேரத்தில் வெளியில் வரக்கூடாது என கூறி அந்த சிறுமியை அவரது அத்தை வீட்டில் விடுவதாக அழைத்தபோது சிறுமி வேண்டாம் என்று  சொல்லியும், அவர் கேட்காமல் கட்டாயப்படுத்தி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அத்தை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் சிறுமியின் அத்தை வீட்டிற்கு அருகில் உள்ள கரம்புகாட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு சந்தேகம் ஏற்பட்டு இருசக்கர வாகனத்தை நிறுத்த சொல்லி கீழே இறங்கிய சிறுமியை திமுக பிரமுகர் முருகேசன், பின்பக்கமாக  கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உடம்பில் கை வைத்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி அழுதபோது இதை யாரிடமும் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் உன்னை கொன்று விடுவதாக திமுக பிரமுகர் முருகேசன்,  மிரட்டியதாகவும் சிறுமி பயத்தில் அவரை தள்ளி விட்டு அருகில் இருந்த சிறுமியின் அத்தை வீட்டிற்கு வந்து நடந்ததை சொல்லி இருக்கிறார். 

சிறுமியின் அத்தை மூலம் சிறுமியின் அம்மாவிற்கு தகவல் தெரிவித்தப்போது பதறிப்போன சிறுமியின் தாய் அழுது கதறி இருக்கிறார். இன்று சிறுமி தனது  அம்மாவுடன் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த முருகேசன், மீது புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் பேரில் முருகேசனை கைது செய்து விசாரணை நடத்திய பிறகு அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola