Delhi Tamilnadu House fire | விஜய் கிளம்பிய சில நிமிடங்களில்! தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து

Continues below advertisement

முதலமைச்சர் விஜய் நிதி ஆயோக் கூட்டத்திற்கு கிளம்பிய அடுத்த சில நிமிடங்களில் அவர் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கவுன்சிலின் 11வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநில முதலமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லி சென்றார். தமிழ்நாடு இல்லம் சென்ற முதலமைச்சரை காவல்துறையினரும், அதிகாரிகளும் வரவேற்றனர். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த விஜய் இன்று காலை நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிளம்பி சென்றார். 

இந்தநிலையில் அவர் கிளம்பி சென்ற அடுத்த சில நிமிடங்களிலேயே தமிழ்நாடு இல்லத்தின் கேண்டீனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது. உடனடியாக ஊழியர்கள் தீயை அணைத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. கேண்டீனில் உள்ள ஏ.சியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து தொடர்பாக விசாரணையும் தீவிரமடைந்துள்ளது. முதலமைச்சர் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்திலேயே தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola