Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை

உலகையே உலுக்கிய நிர்பயா சம்பவம் அரங்கேறிய இந்திய தலைநகர் டெல்லியில் மீண்டும் ஒரு பெண் பேருந்துக்குள்  கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள ராணி பாக் – நங்லோய் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 30 வயதான அந்த பெண், மங்கோல்புரி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். பிதம்புரா குடிசை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் அவர், சம்பவம் நடந்த இரவு வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.  இ-ரிக்ஷாவில் வந்த அவர், சரஸ்வதி விஹார் பகுதியில் இறங்கி அங்கிருந்து வீட்டை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தார்....

அப்போது சரஸ்வதி விஹார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே  ஸ்லீப்பர் பேருந்தின் அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவரிடம்,நேரம் கேட்க அவர் பேருந்து அருகே சென்றுள்ளார். அந்த நபரோ அப்பெண்ணை அருகே வரச் சொல்லி பின்னர் வலுக்கட்டாயமாக பேருந்துக்குள் இழுத்துச் சென்றனர் ....

அதன்பின் பேருந்து நகர்ந்த நிலையில், உள்ளே இருந்த இருவர் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பல கிலோமீட்டர் தூரம் பயணித்த பிறகு, நங்லோய் மெட்ரோ நிலையம் அருகே அவரை இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்....

சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் போலீசை தொடர்புகொண்டார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பேருந்தின் ஓட்டுநர் உமேஷ் மற்றும் நடத்துநர் ரமேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் ஒப்படைக்காபட்டுள்ளனர் . சம்பவம் அரங்கேறிய ஸ்லீப்பர் பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பேருந்தின் கடந்து செல்லும் வழியில் இருந்த CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஜன்னல்கள் முழுவதும் திரைகளால் மூடப்பட்டிருந்ததால், வெளியிலிருந்து உள்ளே என்ன நடக்கிறது என்பதை யாரும் கவனிக்க முடியாத நிலை இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

2012-ம் ஆண்டு நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் மீண்டும் பேருந்துக்குள் இப்படியான சம்பவம் நடந்துள்ளது, பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola