Viral Video: முதலையைக் கட்டிப்போட்டு விளையாடும் மயிலாடுதுறை பாய்ஸ்!
மயிலாடுதுறை அருகே 300 கிலோ எடை 10அடி நீளம் உள்ள ராட்சத முதலை ஊருக்குள் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பல கிராமங்கள் இருந்து வருகிறது. இந்த கொள்ளிடம் ஆற்றில் அவ்வப்போது முதலைகள் வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.