Irfan helps Coimbatore Dad | ’’இந்தாங்க ஒரு லட்சம்!’’மகனுக்காக போராடிய தந்தை..ஓடி வந்த இர்ஃபான்
மகனின் மருத்துவ செலவுக்கு பணம் சேர்ப்பதற்காக ப்ரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட கணேச மூர்த்தி என்பவருக்கு பிரபல யூடியுபர் இர்பான் மற்றும் யூடியுபர்கள் நிதியுதவி அளித்தது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கோவையில் புதிதாக திறக்கப்பட்ட ஹோட்டல் ஒன்றில் கடை விளம்பரத்திற்காக அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும், நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு என்றும், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போட்டியின் முடிவில் இரண்டரை பிரியாணிகளை சாப்பிட்ட வாடகை கார் ஓட்டுனரான கணேசமூர்த்தி இரண்டாம் இடம் பிடித்து 50000 ரூ பரிசை பெற்று அசத்தினார். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தன் மகனின் மருத்துவ செலவுக்காக தான் இந்த போட்டியில் கலந்துக்கொண்டதாக அவர் கூறியிருந்தது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இது தொடர்பான அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் பிரபல யூடியுபரான இர்பான் கணேச மூர்த்தியின் மகனின மருத்துவ செலவுக்காக சக யூடியுபர்களுனான பெப்பா foodie, jr vlogs உள்பட யூடியுபர்கள் ஒன்று சேர்ந்து திரட்டிய 1,05, 500 நிதியுதவியை குழந்தையின் மருத்துவ செலவுக்காக அளித்துள்ளனர்.
சில நாட்களாக சர்ச்சைகளில் சிக்கி வந்த இர்பான் தற்போது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைக்காக சக யூடியுபர்களுடன் சேர்ந்து நிதியுதவி அளித்துள்ளது பலரது பாராட்டை பெற்று வருகிறது.